கடைசி இரண்டு போட்டிக்கு ரூ.1.33 கோடி செலவிட அனுமதி…

Asianet News Tamil  
Published : Dec 08, 2016, 12:47 PM ISTUpdated : Sep 19, 2018, 02:40 AM IST
கடைசி இரண்டு போட்டிக்கு ரூ.1.33 கோடி செலவிட அனுமதி…

சுருக்கம்

இந்தியா-இங்கிலாந்து இடையேயான 4-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு ரூ.1.33 கோடி செலவிட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு (பிசிசிஐ) உச்ச நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி அளித்தது.

இதுதொடர்பாக, தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர் மற்றும் டி.ஒய்.சந்திரசூத் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு வருமாறு: இந்தியா-இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில், 4-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிகளை நடத்துவதற்காக பிசிசிஐ ரூ.1.33 கோடி செலவு செய்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

அத்துடன், 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளை நடத்துவதற்கும், போட்டி ஒன்றுக்கு ரூ.25 லட்சம் வீதம் செலவிட பிசிசிஐக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள இந்த நிதியானது, போட்டிகளை நடத்துவதற்காக மட்டுமே சம்பந்தப்பட்ட மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு அளிக்கப்பட வேண்டும். அதில் எந்தவொரு பகுதியும் சங்கங்களுக்கான நிதியாக அளிக்கப்படக் கூடாது.

அத்துடன், ஏற்கெனவே நடந்துமுடிந்த 3 டெஸ்ட் போட்டிகள் மூலம் கிடைத்துள்ள வருமானம், தற்போது நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளுக்கான செலவு மற்றும் அதிலிருந்து கிடைக்கும் வருமானம் ஆகியவை தொடர்பாக பிசிசிஐ பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் அமர்வு உத்தரவு பிறப்பித்தது.

கடைசி 2 டெஸ்ட் போட்டிகளை நடத்துவதற்காக ரூ.1.33 கோடியும், 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளை நடத்துவதற்காக ரூ.3.79 கோடியும் செலவிட அனுமதிக்குமாறு கோரி பிசிசிஐ தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின்போது உச்ச நீதிமன்றம் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்தது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

IND vs WI 4th T20: 2 அதிரடி மாற்றம்.. வைபவ் சூர்யவன்ஷி கம்பேக்.. சிக்சர் மன்னனுக்கு இடமில்லை.. பிளேயிங் லெவன்!
IND vs WI: 250 ரன் அடிச்சும் தோத்துட்டோமே.. இந்திய பவுலிங் கோச்சை விளாசித் தள்ளிய ஜாம்பவான்!