India vs Japan: நடப்பு சாம்பியன் ஜப்பானை வீழ்த்தி இந்தியா ஹாக்கி டீம் தங்கம் கைப்பற்றி சாதனை!

Published : Oct 06, 2023, 06:43 PM IST
India vs Japan: நடப்பு சாம்பியன் ஜப்பானை வீழ்த்தி இந்தியா ஹாக்கி டீம் தங்கம் கைப்பற்றி சாதனை!

சுருக்கம்

ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று நடந்த ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தங்கம் வென்றுள்ளது.

சீனாவில் ஹாங்சோவில் 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள கலந்து கொண்டுள்ளனர். கிரிக்கெட், துப்பாக்கி சுடுதல், டென்னிஸ், பேட்மிண்டன், ஹாக்கி, குதிரையேற்றம், ஈட்டி எறிதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் என்று ஏராளமான போட்டிகளில் இந்தியா பதக்கங்களை குவித்துள்ளது.

Pakistan vs Netherlands: ஒரேயடியாக நெதர்லாந்திடம் சரண்டரான பாகிஸ்தான் – ஆறுதல் கொடுத்த ரிஸ்வான், சகீல்!

இந்த நிலையில் தான் ஆண்களுக்கான ஹாக்கி இறுதிப் போட்டி தற்போது நடந்து முடிந்துள்ளது. இந்தியா மற்றும் நடப்பு சாம்பியன் ஜப்பான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் மன்ப்ரீத் சிங் ஒரு கோல் அடித்தார். இதையடுத்து போட்டியின் 32ஆவது நிமிடத்தில் ஹர்மன்ப்ரீத் சிங் 2ஆவது கோல் அடித்தார். அடுத்து 37ஆவது நிமிடத்தில் அமித் ரோஹிதாஸ் 3ஆவது கோல் அடித்தார். ஆனால், ஜப்பான் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. போட்டியின் 52 ஆவது நிமிடத்தில் இந்திய வீரர் அபிஷேக் 4ஆவது கோல் அடிக்க இந்தியா 4-0 என்று முன்னிலையில் இருந்தது.

Pakistan vs Netherlands: வரிசையாக வெளியேறிய பாகிஸ்தான் வீரர்கள்: பிளான் போட்டு தூக்கிய நெதர்லாந்து பிளேயர்ஸ்!

இதையடுத்து ஜப்பான் அணி தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ஒரு கோல் அடித்தது. மீண்டும் 59ஆவது நிமிடத்தில் இந்திய அணி கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி ஒரு கோல் அடித்தது. இறுதியாக 5-1 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் ஜப்பானை வீழ்த்தி வெற்றி பெற்று தங்கம் கைப்பற்றியது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக 2024 ஆம் ஆண்டு நடக்க உள்ள பாரிஸ் ஒலிம்பிக்கிற்கும் தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MS Dhoni, JIOMart: ஜியோமார்ட் நிறுவன பிராண்ட் அம்பாஸிடராக தோனி நியமனம்!

இன்று நடந்த மற்றொரு போட்டியில் ஆண்களுக்கான பேட்மிண்டன் அரையிறுதியில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், சீன வீரருடன் மோதி தோல்வி அடைந்தார். எனினும் அவர் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். மேலும், மல்யுத்த போட்டியில் 57கிலோ எடைப்பிரிவில் அமன் செஹ்ராவத் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். இதே போன்று பெண்களுக்கான 76 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் கிரண் பிஷ்னோய் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரையில் இந்தியா 22 தங்கம், 34 வெள்ளி மற்றும் 39 வெண்கலப் பதக்கம் என்று மொத்தமாக 95 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 4ஆவது இடத்தில்

2 உலகக் கோப்பை தோல்விக்கு பாகிஸ்தானுக்கு ஸ்கெட்ச் போட்ட நெதர்லாந்து; டாஸ் வென்று பவுலிங்!

 

 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

3 பார்மேட்டிலும் சதம்.. புதிய வரலாறு படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், 6வது இந்தியர் ஆனார்
Ind Vs SA: இந்திய அணி மிரட்டல் அடி..! இமாலய வெற்றி.. தொடரை கைப்பற்றி அசத்தல்..