உலகக் கோப்பையின் 2ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறியுள்ளனர்.
பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அனிகளுக்கு இடையிலான உலகக் கோப்பையின் 2ஆவது லீக் போட்டி தற்போது ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ஸ் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி பாகிஸ்தான் முதலில் பேட்டிங் ஆடியது. ஆனால், அதற்கு முன்னதாக இரு அணிகளும் 1996 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில் நடந்த உலகக் கோப்பைகளில் மோதியுள்ளன. இதில், பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றுள்ளது.
MS Dhoni, JIOMart: ஜியோமார்ட் நிறுவன பிராண்ட் அம்பாஸிடராக தோனி நியமனம்!
இந்த 2 உலகக் கோப்பை போட்டிகள் தவிர 4 ஒருநாள் போட்டிகளிலும் இரு அணிகளும் விளையாடியுள்ளன. இதில், பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில், தான் 3ஆவது முறையாக இரு அணிகளும் இன்றைய போட்டியின் மூலமாக விளையாடுகின்றன. ஏற்கனவே உலகக் கோப்பை போட்டி உள்பட 6 போட்டிகளில் தோல்வி அடைந்த நெதர்லாந்து அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இன்றைய போட்டியில் சிறப்பாக பந்து வீசி வருகிறது.
2 உலகக் கோப்பை தோல்விக்கு பாகிஸ்தானுக்கு ஸ்கெட்ச் போட்ட நெதர்லாந்து; டாஸ் வென்று பவுலிங்!
நெதர்லாந்து:
விக்ரம்ஜீத் சிங், மேக்ஸ் ஓ'டவுட், கொலின் அக்கர்மேன், ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), தேஜா நிடமானுரு, லோகன் வான் பீக், சாகிப் சுல்பிகர், ரோலோஃப் வான் டெர் மெர்வே, பால் வான் மீகெரென், ஆர்யன் தத், பாஸ் டி லீட்
பாகிஸ்தான்:
ஃபகர் ஜமான், இமாம் உல் ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), சவுத் சகீல், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஹசன் அலி, ஷாகீன் ஷா அஃப்ரிடி, ஹரிஷ் ராஃப்.
பாகிஸ்தான் அணியில் ஃபகர் ஜமான் மற்றும் இமாம் உல் ஹக் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், ஜமான் 12 ரன்களில் ஆட்டமிழக்கவே, அடுத்து வந்த கேப்டன் பாபர் அசாம் 5 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து, இமாம் உல் ஹக் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் 38 ரன்களுக்கு முக்கியமான 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
PAK vs NED: பாகிஸ்தான் – நெதர்லாந்து பலப்பரீட்சை – உலகக் கோப்பை ரெக்கார்ட்ஸ் என்ன சொல்கிறது?
இதையடுத்து, விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் மற்றும் சவுத் சகீல் இருவரும் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். தனது முதல் உலகக் கோப்பையில் விளையாடும் சவுத் சகீல் 52 பந்துகளில் ஒரு சிக்ஸர் 9 பவுண்டரி உள்பட 68 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அகா சல்மானுக்குப் பிறகு பிளேயிங் 11ல் வாய்ப்பு பெற்ற சகீல் அரைசதம் அடித்து அடித்து ஆட்டமிழந்துள்ளார்.
அதன் பிறகு, ரிஸ்வானும் 68 ரன்களில் கிளீன் போல்டான நிலையில் வெளியேறினார். அடுத்து வந்த இப்திகார் அகமது 9 ரன்களில் ஆட்டமிழந்தார். தற்போது வரையில் பாகிஸ்தான் 38 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் மட்டுமே எடுத்து விளையாடி வருகிறது. நெதர்லாந்து அணியைப் பொறுத்தவரையில் தொடக்க வீர்ரகளைத் தவிர 8 வீரர்கள் பந்து வீசியுள்ளனர்.