பாகிஸ்தனுக்கு எதிரான உலகக் கோப்பையின் 2ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளது.
கிரிக்கெட் உலகக் கோப்பையின் 2ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. அதன்படி பாகிஸ்தான் முதலில் விளையாடி வருகிறது. உலகக் கோப்பையில் அடைந்த தோல்விக்கு இந்தப் போட்டியில் நெதர்லாந்து அணி பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நெதர்லாந்து:
விக்ரம்ஜீத் சிங், மேக்ஸ் ஓ'டவுட், கொலின் அக்கர்மேன், ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), தேஜா நிடமானுரு, லோகன் வான் பீக், சாகிப் சுல்பிகர், ரோலோஃப் வான் டெர் மெர்வே, பால் வான் மீகெரென், ஆர்யன் தத், பாஸ் டி லீட்
பாகிஸ்தான்:
ஃபகர் ஜமான், இமாம் உல் ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), சவுத் சகீல், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஹசன் அலி, ஷாகீன் ஷா அஃப்ரிடி, ஹரிஷ் ராஃப்.
PAK vs NED: பாகிஸ்தான் – நெதர்லாந்து பலப்பரீட்சை – உலகக் கோப்பை ரெக்கார்ட்ஸ் என்ன சொல்கிறது?
பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் முதல் முறையாக 1996 ஆம் ஆண்டு நடந்த ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் மோதியுள்ளன. இதில், பாகிஸ்தான் 116 பந்துகள் எஞ்சிய நிலையில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதே போன்று நடந்த 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் பாகிஸ்தான் 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது தவிர 4 ஒரு நாள் போட்டிகளிலும் இரு அணிகளும் விளையாடியுள்ளன. இதில், பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இரு அணிகளும் உலகக் கோப்பையில் விளையாடுகின்றன. இந்தப் போட்டியிலும் பலம் வாய்ந்த பாகிஸ்தான் தான் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரையில் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 7 ஒரு நாள் போட்டிகள் நடந்துள்ளன. இதில், முதலில் பேட்டிங் ஆடிய அணி தான் அதிகளவில் வெற்றி பெற்றிருக்கிறது. அதுவும் 4 முறையும், சேஸிங் செய்த அணி 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது.
ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் 350.
டாஸ் வென்ற அணி 5 முறை வெற்றி பெற்றிருக்கிறது.
டாஸ் தோல்வி அடைந்த அணி 2 முறை வெற்றி பெற்றிருக்கிறது.
ஆவரேஜ் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் – 288
அதிகபட்சமாக சேஸ் செய்யப்பட்ட ஸ்கோர் – 252
எதிர்பார்ப்பு:
உலகக் கோப்பையின் 2 ஆவது லீக் போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் 330.
முதல் பவர்பிளே ஒரு அணி எடுக்கும் ஸ்கோர் 45 ஆக இருக்கலாம்.
எந்த அணி வீரர் ஆட்டநாயகன் விருது பெறுவார்? அவர் யார்?
பாகிஸ்தான் – பாபர் அசாம்
அதிக ரன்கள் குவிக்கும் வீரர் – பாபர் அசாம்
அதிக விக்கெட்டுகள் கைப்பற்றும் வீரர் – ஷாகீன் அஃப்ரிடி
முதல் 30 ரன்களுக்குள் முதல் விக்கெட் விழுவதற்கு வாய்ப்பிருக்கிறது.
முதல் ஓவரில் 5 ரன்கள் எடுக்கப்படலாம்.
அதிக பவுண்டரி எந்த வீரர் அடிப்பார்? - பாபர் அசாம்
இந்த போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
அதிக சிக்ஸர்கள் அடிப்பது கூட பாபர் அசாம் ஆக கூட இருக்கலாம்.