PAK vs NED: 20 ஆண்டுகளுக்கு பிறகு 3ஆவது முறையாக உலகக் கோப்பையில் மோதும் பாகிஸ்தான் – நெதர்லாந்து டீம்ஸ்!

By Rsiva kumar  |  First Published Oct 6, 2023, 1:16 PM IST

முதல் முறையாக பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் 1996 ஆம் ஆண்டு மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில் நடந்த உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ளன.


பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் முதல் முறையாக 1996 ஆம் ஆண்டு நடந்த ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் மோதியுள்ளன. இதில், பாகிஸ்தான் 116 பந்துகள் எஞ்சிய நிலையில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதே போன்று நடந்த 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் பாகிஸ்தான் 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது தவிர 4 ஒரு நாள் போட்டிகளிலும் இரு அணிகளும் விளையாடியுள்ளன. இதில், பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றுள்ளது.

PAK vs NED: பாகிஸ்தான் – நெதர்லாந்து பலப்பரீட்சை – உலகக் கோப்பை ரெக்கார்ட்ஸ் என்ன சொல்கிறது?

Tap to resize

Latest Videos

இந்த நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இரு அணிகளும் உலகக் கோப்பையில் விளையாட உள்ளன. இந்தப் போட்டியிலும் பலம் வாய்ந்த பாகிஸ்தான் தான் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரையில் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 7 ஒரு நாள் போட்டிகள் நடந்துள்ளன. இதில், முதலில் பேட்டிங் ஆடிய அணி தான் அதிகளவில் வெற்றி பெற்றிருக்கிறது. அதுவும் 4 முறையும், சேஸிங் செய்த அணி 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது.

IND vs BAN: அரையிறுதியில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்; திலக் வர்மா அரைசதம்!

ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் 350.

டாஸ் வென்ற அணி 5 முறை வெற்றி பெற்றிருக்கிறது.

டாஸ் தோல்வி அடைந்த அணி 2 முறை வெற்றி பெற்றிருக்கிறது.

ஆவரேஜ் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் – 288

அதிகபட்சமாக சேஸ் செய்யப்பட்ட ஸ்கோர் – 252

Shubman Gill: சுப்மன் கில்லுக்கு டெங்கு பாதிப்பு உறுதி; இந்தியா -ஆஸ்திரேலியா போட்டியில் பங்கேற்பது சந்தேகம்!

பாகிஸ்தான் பிளேயிங் 11:

ஃபகர் ஜமான், இமாம் உல் ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), அகா சல்மான், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், முகமது வாசீம், ஷாகீன் ஷா அஃப்ரிடி, ஹரிஷ் ராஃப்,

நெதர்லாந்து பிளேயிங் 11:

விக்ரம்ஜீத் சிங், மேக்ஸ் ஓ'டவுட், வெஸ்லி பாரேசி, பாஸ் டி லீட், தேஜா நிடமானுரு அல்லது கொலின் அக்கர்மேன், ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), லோகன் வான் பீக், சாகிப் சுல்பிகர், ரோலோஃப் வான் டெர் மெர்வே, பால் வான் மீகெரென்.

ENG vs NZ:அறிமுக உலகக் கோப்பையில் சதம் அடித்த விராட் கோலியின் சாதனை பட்டியலில் இடம் பிடித்த ரச்சின் ரவீந்திரா!

எதிர்பார்ப்பு:

உலகக் கோப்பையின் 2 ஆவது லீக் போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் 330.

முதல் பவர்பிளே ஒரு அணி எடுக்கும் ஸ்கோர் 45 ஆக இருக்கலாம்.

எந்த அணி வீரர் ஆட்டநாயகன் விருது பெறுவார்? அவர் யார்?

பாகிஸ்தான் – பாபர் அசாம்

அதிக ரன்கள் குவிக்கும் வீரர் – பாபர் அசாம்

அதிக விக்கெட்டுகள் கைப்பற்றும் வீரர் – ஷாகீன் அஃப்ரிடி

முதல் 30 ரன்களுக்குள் முதல் விக்கெட் விழுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

முதல் ஓவரில் 5 ரன்கள் எடுக்கப்படலாம்.

அதிக பவுண்டரி எந்த வீரர் அடிப்பார்?  - பாபர் அசாம்

இந்த போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

அதிக சிக்ஸர்கள் அடிப்பது கூட பாபர் அசாம் ஆக கூட இருக்கலாம்.

ENG vs NZ: உலகக் கோப்பையின் அறிமுக போட்டியிலேயே 152 ரன்கள் குவித்து டெவான் கான்வே சாதனை!

click me!