PAK vs NED: பாகிஸ்தான் – நெதர்லாந்து பலப்பரீட்சை – உலகக் கோப்பை ரெக்கார்ட்ஸ் என்ன சொல்கிறது?

By Rsiva kumar  |  First Published Oct 6, 2023, 12:19 PM IST

பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பையின் 2ஆவது லீக் போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு ஹைதராபாத் மைதானத்தில் நடக்கிறது.


கிரிக்கெட் உலகக் கோப்பையின் 13 ஆவது சீசன் நேற்று தொடங்கியது. இதன் முதல் லீக் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இதில், நியூசிலாந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இதையடுத்து உலகக் கோப்பையின் 2ஆவது லீக் போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு நடக்கிறது. ஹைதராபாத்தில் நடக்கு இந்தப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.

IND vs BAN: அரையிறுதியில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்; திலக் வர்மா அரைசதம்!

Tap to resize

Latest Videos

இதற்கு முன்னதாக இரு அணிகளும் 6 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், 6 போட்டியிலும் பாகிஸ்தான் அணி தான் வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக நடந்த ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதுவே உலகக் கோப்பையில் இரு அணிகளும் 2 போட்டிகளில் மோதியுள்ளன. இதில், 2 போட்டியிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றிருக்கிறது.

Shubman Gill: சுப்மன் கில்லுக்கு டெங்கு பாதிப்பு உறுதி; இந்தியா -ஆஸ்திரேலியா போட்டியில் பங்கேற்பது சந்தேகம்!

ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை தகுதிச் சுற்று 2023 போட்டியில் சிறப்பாக விளையாடிய நெதர்லாந்து அணி அமெரிக்கா, நேபாள், ஓமன், ஸ்காட்லாந்து ஆகிய அணிகளை தோற்கடித்து உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது. இதே போன்று ஆசிய கோப்பை 2023 போட்டியில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடியது. ஆசிய கோப்பையில் முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் 238 ரன்கள் வித்தியாசத்தில் நேபாள் அணியை வீழ்த்தியது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் பிறகு இந்தியா, இலங்கைக்கு எதிரான போட்டிகளில் பாகிஸ்தான் தோல்வி அடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.

ENG vs NZ:அறிமுக உலகக் கோப்பையில் சதம் அடித்த விராட் கோலியின் சாதனை பட்டியலில் இடம் பிடித்த ரச்சின் ரவீந்திரா!

இதையடுத்து நடந்த உலகக் கோப்பை வார்ம் அப் போட்டிகளில் நியூசிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. கடைசி வார்ம் அப் போட்டியிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் 14 ரன்களில் தோல்வி அடைந்தது. இதன் மூலமாக 2 வார்ம் அப் போட்டிகளிலும் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது.

நெதர்லாந்து அணிக்கு எதிரான ஒரு வார்ம் அப் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. மேலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து 14.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து பெய்த மழையின் காரணமாக போட்டி கைவிடப்பட்டது.

ENG vs NZ: உலகக் கோப்பையின் அறிமுக போட்டியிலேயே 152 ரன்கள் குவித்து டெவான் கான்வே சாதனை!

இந்த நிலையில், தான் ஒரு ஆண்டு காலத்திற்குப் பிறகு பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் இன்றைய 2ஆவது லீக் போட்டியில் மோதுகின்றன.

பாகிஸ்தான் அணியின் முக்கிய வீரர்:

பாபர் அசாம்

பாகிஸ்தான் அணியின் முக்கிய வீர்ராக இருப்பவர் பாபர் அசாம். இதுவரையில் 108 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 5409 ரன்கள் குவித்துள்ளார். இதில், அதிகபட்சமாக 158 ரன்கள் எடுத்திருக்கிறார். மேலும், 19 சதமும், 28 சதமும் அடித்துள்ளார்.

ஷாகீன் அஃப்ரிடி:

பாகிஸ்தான் அணியின் முக்கியமான வேகப்பந்து வீச்சாளர்களில் இவரும் ஒருவர். இதுவரையில் விளையாடிய 44 ஒரு நாள் போட்டிகளில் 86 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார். சிறந்த பந்து வீச்சாக 35 ரன்கள் கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றியிருக்கிறார்.

England vs New Zealand: உலகக் கோப்பையில் ரசிகர்களுக்கு இலவச குடிநீர் வழங்கப்படும் – ஜெய் ஷா அறிவிப்பு!

நெதர்லாந்து அணியின் முக்கிய வீரர்கள்:

கொலின் அக்கர்மேன்:

நெதர்லாந்து அணியின் சிறந்த ஆல் ரவுண்டரான கொலின் அக்கர்மேன், 7 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 211 ரன்கள் எடுத்துள்ளார். அதோடு 4 விக்கெட்டும் கைப்பற்றியிருக்கிறார்.

லோகன் வான் பீக்:

சிறந்த ஆல் ரவுண்டரான லோகன் வான் பீக் 25 போட்டிகளில் விளையாடி 337 ரன்கள் எடுத்துள்ளார். அதோடு 34 விக்கெட்டுகளும் கைப்பற்றியிருக்கிறார் சிறந்த பந்து வீச்சாக 24 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

பாகிஸ்தான்:

பாபர் அசாம் (கேப்டன்), ஷதாப் கான், ஃபகர் ஜமான், இமாம் உல் ஹக், அப்துல்லா ஷாஃபிக்,  முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), சவுத் ஷகீல், இப்திகார் அகமது, அகா சல்மான், உசாமா மிர், முகமது நவாஸ், ஷாகீன் ஷா அஃப்ரிடி, ஹரிஷ் ராஃப், முகமது வாசீம், ஹசன் அலி.

நெதர்லாந்து:

ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), மேக்ஸ் ஓ'டவுட், பாஸ் டி லீட், விக்ரம் சிங், தேஜா நிடமானுரு, பால் வான் மீகெரென், கொலின் அக்கர்மேன், ரோலோஃப் வான் டெர் மெர்வே, லோகன் வான் பீக், ஆர்யன் தத், ரியான் க்ளீன், வெஸ்லி பாரேசி, சாகிப் சுல்பிகர், ஷாரிஸ் அகமது, சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட்.

World Cup 2023: அங்கு என்ன தெரிகிறது? வடிவேலு பட மீம்ஸ் உருவாக காரணமான ஜோஸ் பட்லர்!

Expectation - Pakistan vs Netherlands 2nd Match Cricket World Cup 2023:

  • உலகக் கோப்பையின் 2 ஆவது லீக் போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் 330.
  • முதல் பவர்பிளே ஒரு அணி எடுக்கும் ஸ்கோர் 45 ஆக இருக்கலாம்.
  • எந்த அணி வீரர் ஆட்டநாயகன் விருது பெறுவார்? அவர் யார்?
  • பாகிஸ்தான் – பாபர் அசாம்
  • அதிக ரன்கள் குவிக்கும் வீரர் – பாபர் அசாம்
  • அதிக விக்கெட்டுகள் கைப்பற்றும் வீரர் – ஷாகீன் அஃப்ரிடி
  • முதல் 30 ரன்களுக்குள் முதல் விக்கெட் விழுவதற்கு வாய்ப்பிருக்கிறது.
  • முதல் ஓவரில் 5 ரன்கள் எடுக்கப்படலாம்.
  • அதிக பவுண்டரி எந்த வீரர் அடிப்பார்?  - பாபர் அசாம்
  • இந்த போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
  • அதிக சிக்ஸர்கள் அடிப்பது கூட பாபர் அசாம் ஆக கூட இருக்கலாம்.

விவாகரத்து பெற்ற ஷிகர் தவான்! மனைவி ஆயிஷா செய்த கொடுமைகளுக்கு முடிவுகட்டிய டெல்லி நீதிமன்றம்

click me!