உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் சுப்மன் கில்லுக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.
கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் தொடங்கியுள்ளது. அகமதாபாத்தில் நேற்று நடந்த இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை முதல் லீக் போட்டியில் நியூசிலாந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் பிரம்மாண்டமான வெற்றியை பதிவு செய்தது. இதையடுத்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 5ஆவது லீக் போட்டி வரும் 8ஆம் தேதி சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்க இருக்கிறது.
ஆனால், அதற்குள்ளாக இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில்லுக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது. வார்ம் அம் அப் போட்டிக்காக திருவனந்தபுரம் சென்றிருந்த இந்திய அணி மழையால் போட்டி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிக்காக இந்திய அணி சென்னை திரும்பியது. சென்னை வந்தது முதல் சுப்மன் கில் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ENG vs NZ: உலகக் கோப்பையின் அறிமுக போட்டியிலேயே 152 ரன்கள் குவித்து டெவான் கான்வே சாதனை!
இதன் காரணமாக அவர் டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளார் என்றும் கூறப்பட்டது. அதில், தான் அவருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. பொதுவாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைய குறைந்தது 7 முதல் 10 நாட்கள் வரையில் ஆகும். இந்த நிலையில் தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் கில் விளையாட வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது. சுப்மன் கில் இல்லையென்றால், அவருக்குப் பதிலாக தொடக்க வீரராக இஷான் கிஷான் களமிறங்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த ஆண்டில் மட்டும் ஒரு நாள் போட்டிகளில் 1230 ரன்கள் குவித்துள்ளார். இதில், 5 சதமும், 5 அரைசதமும் அடங்கும். அதிகபட்சமாக 208 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.