Pakistan vs Netherlands: ஒரேயடியாக நெதர்லாந்திடம் சரண்டரான பாகிஸ்தான் – ஆறுதல் கொடுத்த ரிஸ்வான், சகீல்!

Published : Oct 06, 2023, 05:54 PM IST
Pakistan vs Netherlands: ஒரேயடியாக நெதர்லாந்திடம் சரண்டரான பாகிஸ்தான் – ஆறுதல் கொடுத்த ரிஸ்வான், சகீல்!

சுருக்கம்

நெதர்லாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை 2ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அனிகளுக்கு இடையிலான உலகக் கோப்பையின் 2ஆவது லீக் போட்டி தற்போது ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ஸ் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி பாகிஸ்தான் முதலில் பேட்டிங் ஆடியது. ஆனால், அதற்கு முன்னதாக இரு அணிகளும் 1996 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில் நடந்த உலகக் கோப்பைகளில் மோதியுள்ளன. இதில், பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றுள்ளது.

Pakistan vs Netherlands: வரிசையாக வெளியேறிய பாகிஸ்தான் வீரர்கள்: பிளான் போட்டு தூக்கிய நெதர்லாந்து பிளேயர்ஸ்!

இந்த 2 உலகக் கோப்பை போட்டிகள் தவிர 4 ஒருநாள் போட்டிகளிலும் இரு அணிகளும் விளையாடியுள்ளன. இதில், பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில், தான் 3ஆவது முறையாக இரு அணிகளும் இன்றைய போட்டியின் மூலமாக விளையாடுகின்றன. ஏற்கனவே உலகக் கோப்பை போட்டி உள்பட 6 போட்டிகளில் தோல்வி அடைந்த நெதர்லாந்து அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இன்றைய போட்டியில் சிறப்பாக பந்து வீசி வருகிறது.

MS Dhoni, JIOMart: ஜியோமார்ட் நிறுவன பிராண்ட் அம்பாஸிடராக தோனி நியமனம்!

நெதர்லாந்து:

விக்ரம்ஜீத் சிங், மேக்ஸ் ஓ'டவுட், கொலின் அக்கர்மேன், ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), தேஜா நிடமானுரு, லோகன் வான் பீக், சாகிப் சுல்பிகர், ரோலோஃப் வான் டெர் மெர்வே, பால் வான் மீகெரென், ஆர்யன் தத், பாஸ் டி லீட்

பாகிஸ்தான்:

ஃபகர் ஜமான், இமாம் உல் ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), சவுத் சகீல், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஹசன் அலி, ஷாகீன் ஷா அஃப்ரிடி, ஹரிஷ் ராஃப்.

2 உலகக் கோப்பை தோல்விக்கு பாகிஸ்தானுக்கு ஸ்கெட்ச் போட்ட நெதர்லாந்து; டாஸ் வென்று பவுலிங்!

பாகிஸ்தான் அணியில் ஃபகர் ஜமான் மற்றும் இமாம் உல் ஹக் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், ஜமான் 12 ரன்களில் ஆட்டமிழக்கவே, அடுத்து வந்த கேப்டன் பாபர் அசாம் 5 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து, இமாம் உல் ஹக் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் 38 ரன்களுக்கு முக்கியமான 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதையடுத்து, விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் மற்றும் சவுத் சகீல் இருவரும் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். தனது முதல் உலகக் கோப்பையில் விளையாடும் சவுத் சகீல் 52 பந்துகளில் ஒரு சிக்ஸர் 9 பவுண்டரி உள்பட 68 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அகா சல்மானுக்குப் பிறகு பிளேயிங் 11ல் வாய்ப்பு பெற்ற சகீல் அரைசதம் அடித்து அடித்து ஆட்டமிழந்துள்ளார்.

PAK vs NED: 20 ஆண்டுகளுக்கு பிறகு 3ஆவது முறையாக உலகக் கோப்பையில் மோதும் பாகிஸ்தான் – நெதர்லாந்து டீம்ஸ்!

அதன் பிறகு, ரிஸ்வானும் 68 ரன்களில் கிளீன் போல்டான நிலையில் வெளியேறினார். அடுத்து வந்த இப்திகார் அகமது 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ஷதாப் கான் மற்றும் முகமது நவாஸ் இணைந்து ஓரளவு ரன்கள் சேர்த்தனர். எனினும், நவாஸ் 39 ரன்களில் ரன் அவுட் முறையில் வெளியேறினார். ஷதாப் கான் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹசன் அலி டக் அவுட்டில் ஆட்டமிழக்க, ஷாகீன் அஃப்ரிடி மற்றும் ஹரீஷ் ராஃப் இருவரும் கடையில் வந்து 29 ரன்கள் எடுத்து கொடுத்தனர். ஹரிஷ் ராஃப் 16 ரன்களில் ஆட்டமிழக்க, அஃப்ரிடி 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

PAK vs NED: பாகிஸ்தான் – நெதர்லாந்து பலப்பரீட்சை – உலகக் கோப்பை ரெக்கார்ட்ஸ் என்ன சொல்கிறது?

இதன் மூலமாக பாகிஸ்தான் அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. பந்து வீச்சில் பாஸ் டி லீட் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். கொலின் அக்கர்மேன் 2 விக்கெட்டுகளும், ஆர்யன் தத், லோகன் வான் பீக், பால் வான் மீக்கெரன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!
இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?