காமன்வெல்த் போட்டிகள்: 10ம் நாளில் 15 பதக்கங்களை வாரி குவித்த இந்திய வீரர்கள், வீராங்கனைகள்

By karthikeyan VFirst Published Aug 8, 2022, 9:24 AM IST
Highlights

காமன்வெல்த் போட்டிகளின் 10ம் நாளில் இந்திய வீரர், வீராங்கனைகள் 15 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.
 

பர்மிங்காமில் கடந்த ஜூலை மாதம் 29ம் தேதி தொடங்கி நடந்துவரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்றுடன்(ஆகஸ்ட் 7) முடிவடைகிறது. 10ம் நாளான நேற்று இந்திய வீரர், வீராங்கனைகள் அபாரமாக விளையாடி 15 பதக்கங்களை குவித்தனர்.

10ம் நாளான ஆகஸ்ட் 7ம் தேதி இந்தியா 5 தங்கம், 4 வெள்ளி மற்றும் 6  வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களை வென்றது. பாக்ஸிங், டேபிள் டென்னிஸ், ஈட்டி எறிதல், டிரிபிள் ஜம்ப், மகளிர் கிரிக்கெட், ஹாக்கி, நடை போட்டி ஆகிய போட்டிகளில் பதக்கங்களை வென்றது.

10ம் நாள் ஆட்டத்தில் இந்தியா வென்ற பதக்க பட்டியலை பார்ப்போம்.

இதையும் படிங்க - ஒரு வசதியும் செய்து கொடுக்கல.. இப்ப வாழ்த்து சொல்றீங்க! அரவிந்த் கேஜ்ரிவாலை சங்கடப்படுத்திய மல்யுத்த வீராங்கனை

5 தங்கம்:

1. நிகத் ஜரீன் - பாக்ஸிங் 
2. ஷரத் கமல் & ஸ்ரீஜா குலா - டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் 
3. எல்தோஸ் பால் - ஆடவர் டிரிபிள் ஜம்ப்
4. அமித் பங்கால் - பாக்ஸிங்
5. நீத்து கங்காஸ் - பாக்ஸிங்

4 வெள்ளி:

1. சாகர் - பாக்ஸிங்
2. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி
3. ஷரத் கமல் & சத்தியன் ஞானசேகரன் - டேபிள் டென்னிஸ் ஆடவர் இரட்டையர்
4. அப்துல்லா அபுபக்கர் - டிரிபிள் ஜம்ப்

இதையும் படிங்க - தங்கம் வென்றது வீராங்கனை.. கொண்டாடப்பட்டதோ முதலமைச்சர்..! சர்ச்சையில் சிக்கிய விளையாட்டு ஆணைய தலைவர்

6 வெண்கலம்:

1. கிடாம்பி ஸ்ரீகாந்த் - பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் 
2. தீபிகா பல்லிகல் & சௌரவ் கோஷல் - ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர்
3. த்ரீசா ஜோலி & காயத்ரி கோபிசந்த் - பேட்மிண்டன் மகளிர் இரட்டையர்
4. சந்தீப் குமார்  - 10,000மீ நடை போட்டி
5. அன்னு ராணி - ஈட்டி எறிதல்
6. மகளிர் ஹாக்கி அணி

காமன்வெல்த் போட்டிகள் 10ம் நாள் முடிவில் இந்தியா 18 தங்கம், 15 வெள்ளி மற்றும் 22 வெண்கலம் என மொத்தமாக 55 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 5ம் இடத்தில் நீடிக்கிறது இந்தியா. 
 

click me!