காமன்வெல்த் மகளிர் டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவிற்கு தங்கம்; இந்தியாவிற்கு வெள்ளி! ஃபைனலில் இந்தியா தோல்வி

By karthikeyan VFirst Published Aug 8, 2022, 8:32 AM IST
Highlights

காமன்வெல்த் மகளிர் டி20 ஃபைனலில் ஆஸ்திரேலியாவிடம் 9 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்து இந்திய அணி தங்கத்தை இழந்து, வெள்ளி வென்றது.
 

பர்மிங்காமில் நடந்துவரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் முதல் முறையாக மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி சேர்க்கப்பட்டது. மகளிர் டி20 கிரிக்கெட்டின் ஃபைனலில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்திய மகளிர் அணி:

ஸ்மிரிதி மந்தனா, ஷஃபாலி வெர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), தீப்தி ஷர்மா, பூஜா வஸ்ட்ராகர், ஸ்னே ராணா, தானியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ராதா யாதவ், மேக்னா சிங், ரேணுகா சிங்.

இதையும் படிங்க - தங்கம் வென்றது வீராங்கனை.. கொண்டாடப்பட்டதோ முதலமைச்சர்..! சர்ச்சையில் சிக்கிய விளையாட்டு ஆணைய தலைவர்

ஆஸ்திரேலிய மகளிர் அணி:

அலைசா ஹீலி (விக்கெட் கீப்பர்), பெத் மூனி, மெக் லானிங் (கேப்டன்), டாலியா மெக்ராத், ரேச்சல் ஹெய்ன்ஸ், ஆஷ்லி கார்ட்னர், க்ரேஸ் ஹாரிஸ், ஜெஸ் ஜானசென், ஆலனா கிங், மேகன் ஷட், டார்சி ப்ரௌன்.

முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனை பெத் மூனி அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். 41 பந்தில் 61 ரன்களை குவித்தார். கேப்டன் லானிங் 26 பந்தில் 36 ரன்கள் அடித்தார். கார்ட்னர் 15 பந்தில் 25 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 161 ரன்கள் அடித்தது.

162 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணியில் தொடக்க வீராங்கனைகள் ஷஃபாலி வெர்மா (11), ஸ்மிரிதி மந்தனா (6) ஆகிய இருவருமே சொதப்பினர். 3ம் வரிசையில் இறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 33 பந்தில் 33 ரன்கள் மட்டுமே அடித்தார். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் மட்டுமே பொறுப்புடன் அடித்து ஆடி அரைசதம் அடித்தார். 43 பந்தில் ஹர்மன்ப்ரீத் கௌர் 65 ரன்கள் அடித்தார். அவரைத்தவிர வேறு யாருமே சரியாக ஆடாததால் 19.3 ஓவரில் 152 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டாகி 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இதையும் படிங்க - ஒரு வசதியும் செய்து கொடுக்கல.. இப்ப வாழ்த்து சொல்றீங்க! அரவிந்த் கேஜ்ரிவாலை சங்கடப்படுத்திய மல்யுத்த வீராங்கனை

வேறு யாராவது ஒரு வீராங்கனை நன்றாக ஆடியிருந்தால் கூட இந்திய அணி வெற்றி பெற்று தங்கத்தை வென்றிருக்கும். ஃபைனலில் தோற்றதால் இந்தியா தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்து வெள்ளி பதக்கம் வென்றது. ஆஸ்திரேலிய மகளிர் அணி தங்கம் வென்றது.
 

click me!