ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் இன்று நடக்கும் கடைசி ரவுண்ட் ராபின் லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
கடந்த 3 ஆம் தேதி முதல் சென்னையில் 7ஆவது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நடந்து வருகிறது. வரும் 12 ஆம் தேதி வரையில் நடைபெறும் இந்த தொடரில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், தென் கொரியா, மலேசியா, ஜப்பான் ஆகிய 6 அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா 3 முறை ஆண்களுக்கான ஆசிய ஹாக்கி டிராபியை கைப்பற்றியுள்ளன. தென் கொரியா அணி ஒரு முறை டிராபியை கைப்பற்றி உள்ளது.
பிசிசிஐ ரூ.1,159 கோடி வருமான வரி செலுத்தியது – பங்கஜ் சவுத்ரி!
undefined
இந்த நிலையில் இன்று நடக்கும் ரவுண்ட் ராபின் கடைசி லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி இன்று இரவு 8.30 மணிக்கு நடக்கிறது. இதுவரையில் இந்தியா 4 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு போட்டியில் டிராவுடன் புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது.
சஹால் சாதனையை முறியடித்த குல்தீப் யாதவ்!
இரண்டாவது இடத்தில் மலேசியா இடம் பெற்றுள்ளது. 4 போட்டிகளில் விளையாடி 3ல் வெற்றியும், ஒரு போட்டி டிராவும் ஆன நிலையில் 9 புள்ளிகள் பெற்று 2ஆவது இடம் பெற்றுள்ளது. 3ஆவது இடத்தில் கொரியாவும், 4ஆவது இடத்தில் பாகிஸ்தான் அணியும் இடம் பெற்றுள்ளன. 5ஆவது இடத்தில் ஜப்பான் மற்றும் 6ஆவது இடத்தில் சீனா அணிகள் இடம் பெற்றுள்ளன.
திலக வர்மாவை அரைசதம் அடிக்கவிடாமல் போட்டியை முடித்து கொடுத்த ஹர்திக் பாண்டியா!
இந்த நிலையில் இன்று மாலை 4 மணிக்கு நடக்கும் முதல் போட்டியில் ஜப்பான் மற்றும் சீனா அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியைத் தொடர்ந்து இரவு 6.15 மணிக்கு மலேசியா மற்றும் கொரியா அணிகள் மோதுகின்றன. இறுதியாக ரவுண்ட் ராபின் லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
2023 ஹாக்கிப் போட்டியில் பங்கேற்றுள்ள இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான், கொரியா, சீனா அணிகளின் கேப்டன்களுடன் மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் இன்று கலந்துரையாடினோம்.
ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டிக்கான ஏற்பாடும், தமிழ்நாட்டின் உணவு -… pic.twitter.com/DFRMNhz6II
ஏற்கனவே இந்தியா அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. எனினும், இந்தப் போட்டியில் கண்டிப்பாக பாகிஸ்தானை வீழ்த்த கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.