#TokyoOlympics ஒலிம்பிக்கில் 41 ஆண்டுகளுக்கு பிறகு அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய ஹாக்கி அணி

By karthikeyan VFirst Published Aug 1, 2021, 7:32 PM IST
Highlights

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் ஹாக்கி காலிறுதியில் பிரிட்டன் அணியை 3-1 என வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
 

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் ஹாக்கி காலிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி, இன்று காலிறுதியில் பிரிட்டனை எதிர்கொண்டது. இந்த போட்டியில் ஆரம்பம் முதலே இந்திய வீரர்கள் பிரிட்டன் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடினர்.

ஆட்டத்தின் 7வது நிமிடத்தில் இந்திய வீரர் தீல்ப்ரீத் சிங் முதல் கோலை அடித்தார். மீண்டும் 16வது நிமிடத்தில் இந்திய வீரர் குர்ஜாந்த் சிங் ஒரு கோல் அடிக்க, இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது.

அதன்பின்னர் அடுத்த அரைமணி நேரம் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 45வது நிமிடத்தில் பிரிட்டனுக்கு முதல் கோல் கிடைத்தது. மீண்டும் 57வது நிமிடத்தில் ஹர்திக் சிங் இந்தியாவிற்கு ஒரு கோல் அடித்து கொடுக்க, போட்டி முடிவில் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இந்திய ஹாக்கி அணி, ஒலிம்பிக்கில் 41 ஆண்டுகளுக்கு பிறகு அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
 

click me!