ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் ஸ்பெயின் அணிக்கு எதிராக நடந்த வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தியா தோல்வி அடைந்து 4ஆவது இடம் பிடித்தது.
ஆண்டுதோறும் நடக்கும் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் 13ஆவது சீசன் இன்று மலேசியாவின் கோலாலம்பூரில் பிரம்மாண்டமாக தொடங்கியது. மலேசியாவின் தேசிய ஹாக்கி ஸ்டேடியத்தில் தொடங்கிய இந்த ஹாக்கி தொடரானது வரும், 16ஆம் தேதி வரையில் நடக்கிறது. இந்த தொடரில், 16 அணிகள் இடம் பெற்று 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதுகின்றன. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
ஐபிஎல் வரலாற்றில் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவர் ரோகித் சர்மா – ஆகாஷ் சோப்ரா பாராட்டு!
இதில், ஏ பிரிவில் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, சிலி, மலேசியா ஆகிய அணிகளும் பி பிரிவில் எகிப்து, பிரான்ஸ், தென் ஆப்பிரிக்கா, ஜெர்மனி ஆகிய அணிகளும், சி பிரிவில் இந்தியா, தென் கொரியா, ஸ்பெயின், கனடா ஆகிய அணிகளும், டி பிரிவில் பெல்ஜியம், நெதர்லாந்து, நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இதில் இந்தியா தனது முதல் போட்டியில் தென் கொரியாவை வீழ்த்தியது. 2ஆவது போட்டியில் ஸ்பெயினிடம் தோல்வி அடைந்தது. இதையடுத்து 3 ஆவது போட்டியில் கனடாவை வீழ்த்தி காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதில், 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
அரையிறுதிப் போட்டியில் ஜெர்மனி அணியை எதிர்கொண்டது. இதில் ஜெர்மனி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததன் மூலமாக வெண்கலப் பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. புள்ளிப்பட்டியலில் 3 மற்றும் 4ஆவது இடத்திற்கான போட்டியில் இந்தியா மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் ஸ்பெயின் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது. . இரண்டு முறை ஜூனியர் உலகக் கோப்பை சாம்பியனான இந்தியாவுக்கு எதிராக ஸ்பெயின் வீரர் நிக்கோலஸ் அல்வாரெஸ் முதல் கோல் அடித்து ஸ்பெயினை முன்னிலை படுத்தினார். இதையடுத்து 38ஆவது நிமிடத்தில் அரைஜீத் ஹூண்டல் கோல் அடிக்கவே இந்தியா 1-1 என்று சமன் செய்தது.
போட்டியின் 40ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் Petchame Pau ஒரு கோல் அடிக்கவே ஸ்பெயின் 2-1 என்று முன்னிலை பெற்றது. மீண்டும் 51ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் ஒரு கோல் அடித்டு 3-1 என்று முன்னிலை வகித்தது. இறுதியாக ஸ்பெயின் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது. இந்தியா 4ஆவது இடம் பிடித்தது.