வரும் 2024 ஆம் ஆண்டு டி10 என்ற பெயரில் மினி ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பிசிசிஐ மூலமாக நடத்தப்படும் ஒரு தொடர் தான் இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல். கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரையில் 16 சீசன்கள் நடத்தப்பட்டுள்ளது. இதுவரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா 5 முறை சாம்பியனாகியுள்ளன. இந்த ஐபிஎல் தொடர் மூலமாக வீரர்கள் அதிக வருமானம் ஈட்டி வருகின்றனர். அவர்கள் மட்டுமின்றி பிசிசிஐ சம்பாதித்து வருகிறது.
இதன் காரணமாக இந்திய வீரர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு வீரர்களும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க ஆர்வம் காட்டி வருகின்றனர். பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் செப்டம்பர் மாதம் சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர்காக பிசிசிஐ செப்டம்பரில் எந்த ஒரு சர்வதேச போட்டியும் நடத்தாமல் வைத்திருந்தது.
5.3 ஓவரில் 4 மெய்டன் 5 விக்கெட் – இங்கிலாந்திற்கு எதிராக சாதனை படைத்த இந்திய வீராங்கனை தீப்தி சர்மா!
ஆனால், சாம்பியன்ஸ் லீக் டி20 எனப்படும் சிஎல்டி ரத்தான நிலையில், அந்த மாதத்தில் மினி ஐபிஎல் தொடரை நடத்தலாம் என்று பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், ஐபிஎல் தொடரில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகளை வைத்து இந்த தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக பிசிசிஐ, ஐசிசியிடமிருந்து அனுமதியும் பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.
அடுத்த ஆண்டு அல்லது வரும் 2025 ஆம் ஆண்டு முதல் மினி ஐபிஎல் டி10 லீக் தொடர் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக அபுதாபி, அமெரிக்கா, ஜிம்பாப்வே ஆகிய நாடுகளில் டி10 தொடர் நடத்தப்பட்டு வருகிறது.