Arjuna Award 2023: உலகக் கோப்பையில் சிறந்து விளங்கிய முகமது ஷமியின் பெயர் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை!

By Rsiva kumar  |  First Published Dec 13, 2023, 8:15 PM IST

உலகக் கோப்பையில் சிறப்பாக பந்து வீசிய முகமது ஷமியின் பெயர் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடந்தது. ஒட்டு மொத்த உலகமும் இந்த டிராபிக்காகத்தான் காத்துக் கொண்டிருந்தது. கடந்த 2011 ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பையை கைப்பற்றியது. அதன் பிறகு இந்திய அணி டிராபியை கைப்பற்றவில்லை. உலகக் கோப்பை டிராபியை கைப்பற்றும் வாய்ப்பு இந்திய அணிக்கு கிடைத்தும் கோட்டைவிட்டது.

Rohit Sharma: 4 நிமிட வீடியோவில் ஒட்டு மொத்த வலியையும், வேதனையையும் வெளிப்படுத்திய ரோகித் சர்மா!

Latest Videos

undefined

உலகக் கோப்பையில் 9 லீக் போட்டிகள் மற்றும் ஒரு அரையிறுதிப் போட்டி என்று 10 போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆனால், ஆஸ்திரேலியா 7 லீக் போட்டிகள் மற்றும் ஒரு அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு வந்தது. இதில் இந்தியா 240 ரன்கள் எடுக்க, ஆஸ்திரேலியா 241 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று 6ஆவது முறையாக சாம்பியனானது. இந்த உலகக் கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியாவிற்கு காயம் ஏற்படவே, சூர்யகுமார் யாதவ் மற்றும் முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைத்தது. இதில், நியூசிலாந்திற்கு எதிரான போட்டியின் மூலமாக விளையாடினார்.

South Africa vs India 2nd T20I: வெளியில் வந்த பிறகு தான் சொன்னாங்க, கண்ணாடிய உடச்சத்துக்கு சாரி – ரிங்கு சிங்!

இந்திய அணியில் இடம் பெற்று விளையாடினார். இந்தப் போட்டியிலேயே 5 விக்கெட்டுகள் கைப்பற்றி ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த தொடரில் 7 இன்னிங்ஸில் விளையாடிய முகமது ஷமி 24 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். சிறந்த பந்து வீச்சாக 57 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.

இந்த நிலையில், உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முகமது ஷமியின் பெயரை இந்த ஆண்டுக்கான அர்ஜூனா விருதுக்கு தேர்வுக் குழு பரிந்துரை செய்துள்ளது. அர்ஜூனா விருதுக்கான பட்டியலில் முகமது ஷமியின் பெயர் இல்லாத நிலையில், விளையாட்டு அமைச்சகத்திடம் பிசிசிஐ ஒரு சிறப்பு கோரிக்கையாக ஷமியின் பெயரை அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

CSK, MI: சென்னை ஒன்னு ஜெயிச்சா மும்பை ரெண்டு ஜெயிக்க பிளான் பண்ணும் – ரவிச்சந்திரன் அஸ்வின் ஓபன் டாக்!

விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் நாட்டின் 2ஆவது உயரிய விருதாக அர்ஜூனா விருது கருதப்படுகிறது. இதற்கு முன்னதாக கவுதம் காம்பீர், ஹர்பஜன் சிங், வீரேந்திர சேவாக், மிதாலி ராஜ், ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி, ரவி சாஸ்திரி, சச்சின் டெண்டுல்கர், அனில் கும்ப்ளே உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள் பலருக்கும் அர்ஜூனா விருது வழங்கப்பட்டுள்ளது.

click me!