Breaking: மழையால் போட்டி பாதிப்பு: இன்னிங்ஸ் முடியும் தருவாயில் குறுக்கிட்ட மழை!

Published : Dec 12, 2023, 10:28 PM ISTUpdated : Dec 12, 2023, 10:43 PM IST
Breaking: மழையால் போட்டி பாதிப்பு: இன்னிங்ஸ் முடியும் தருவாயில் குறுக்கிட்ட மழை!

சுருக்கம்

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக இந்தியா பேட்டிங் செய்து வரும் நிலையில், மழை குறுக்கிட்டதால் போட்டியானது நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டி தற்போது கியூபெர்காவில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.

ACC U19 Asia Cup 2023: ராஜ் லிம்பானி 7 விக்கெட் கைப்பற்றி சாதனை – யு19 ஆசிய கோப்பையில் இந்தியா வெற்றி!

அதன்படி வந்த திலக் வர்மா 29 ரன்கள் சேர்த்து வெளியேறினார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்து சாதனை படைத்தார். அவர், 56 ரன்களில் வெளியேறவே, ஜித்தேஷ் சர்மா 1 ரன்னிலும், ரவீந்திர ஜடேஜா 19 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த அர்ஷ்தீப் சிங் கோல்டன் டக்கில் வெளியேறினார்.

Most Searched Cricketer: கூகுளின் 25 ஆண்டுகால வரலாற்றில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரராக விராட் கோலி சாதனை!

அவர் வந்ததுமே மழையும் வரவே போட்டியானது முடியும் நிலையில் நிறுத்தப்பட்டது. போட்டியின் 20ஆவது ஓவரை கெரால்டு கோட்ஸி வீசிக் கொண்டிருந்தார். அந்த ஓவரில் 2ஆவது பந்தில் ஜடேஜா ஆட்டமிழக்க 3ஆவது பந்தில் அர்ஷ்தீப் சிங் ஆட்டமிழந்தார். இதையடுத்து மழை குறுக்கிடவே போட்டியானது நிறுத்தப்பட்டது. ரிங்கு சிங் 68 ரன்களுடன் விளையாடி வருகிறார். முகமது சிராஜ் களத்தில் இருக்கிறார். போட்டியின் 19.3 ஆவது ஓவர் வரையில் இந்தியா 7 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் எடுத்துள்ளது.

தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், ஓவர்கள் குறைக்கப்படவும் வாய்ப்புகள் இருக்கிறது. இது தென் ஆப்பிரிக்காவிற்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ICC New Rules, Stop Clock:ஐசிசியின் ஸ்டாப் வாட்ச் விதிமுறை அமல் – பெனால்டியாக 5 ரன்கள் கொடுக்க போகும் அணி எது?

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

ஐபிஎல் மினி ஏலத்தில் பெரும் தவறு செய்த சிஎஸ்கே.. குறைகளை சுட்டிக்காட்டிய ஜாம்பவான்!
IND vs SA 4வது T20 போட்டி ரத்து..! காத்திருந்து.. காத்திருந்து.. ஏமாந்த ரசிகர்கள்.. இதுதான் காரணம்!