இந்தியா மற்றும் ஜப்பான் அணிகளுக்குயிடைலாக நடந்த FIH மகளிர் ஹாக்கி ஒலிம்பிக் தகுதிச் சுற்றின் 3ஆவது இடத்திற்கான பிளே ஆஃப் சுற்று போட்டியில் இந்தியா தோல்வி அடைந்து பாரிஸ் 2024 ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளது.
பாரிஸ் 2024 ஒலிம்பிக் தகுதிச் சுற்றுப் போட்டிக்கான மகளிர் ஹாக்கி ஒலிம்பிக் தகுதிச் சுற்று போட்டிகள் ராஞ்சியில் நடந்தது. கடந்த 13 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரையில் நடந்த இந்த போட்டியில் ஜெர்மனி, அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, நியூசிலாந்து, இத்தாலி, சிலி, செக் குடியரசு நாடு என்று மொத்தமாக 8 அணிகள் இடம் பெற்று விளையாடின. இதில், நியூசிலாந்து, இத்தாலி, சிலி மற்றும் செக் குடியரசு அணிகள் தோல்வி அடைந்து பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தன.
பதக்கத்திற்கான போட்டியில் ஜெர்மனி, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா என்று 4 அணிகள் மோதின. முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஜெர்மனி அணிகள் மோதின. இதில், இந்தியா தோல்வி அடைந்தது. இதே போன்று மற்றொரு போட்டியில் அமெரிக்கா மற்றும் ஜப்பான் அணிகள் மோதின. இதில், ஜப்பான் தோல்வி அடைந்தது. இதன் மூலமாக ஜெர்மனி மற்றும் அமெரிக்கா அணிகள் முதல் 2 அணிகளாக ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றன. எனினும், 3ஆவது மற்றும் 4ஆவது இடத்திற்கான போட்டி நேற்று நடந்தது.
பெரிய விளையாட்டு போட்டிகளை இந்தியாவில் நடத்த வேண்டும் - பிரதமர் மோடி!
இதில் இந்தியா மற்றும் ஜப்பான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் கடைசி வரை இந்திய அணியால் ஒரு கோல் கூட அடிக்கமுடியவில்லை. பெனால்டி கார்னர் வாய்ப்பையும் தவற விடவே, ஜப்பான் ஒரு கோல் அடித்து பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றது. ஜப்பான் அணிக்கு முதல் பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதனை தவற விட, 2ஆவது முறையாக வாய்ப்பு கிடைத்தது.
அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட கன உரதா ஒரு கோல் அடிக்க ஜப்பான் 1-0 என்று முன்னிலை பெற்றது. அதன் பிறகு கடைசி வரை இரு அணிகளுமே கோல் அடிக்கவில்லை. இதனால் ஜப்பான் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று பாரிஸ் 2024 ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றது. ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்து பாரிஸ் 2024 கோடைகால ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றது.