பாகிஸ்தானுக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
நியூசிலாந்திற்கு வருகை தந்த ஷாகீன் அஃப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில், ஏற்கனவே நடந்து முடிந்த 3 டி20 போட்டிகளிலும் நியூசிலாந்து வெற்றி பெற்று 3-0 என்று தொடரை கைப்பற்றியுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 4ஆவது டி20 போட்டி இன்று கிறிஸ்ட்சர்ஜ் மைதானத்தில் நடந்தது.
டி20 உலகக் கோப்பைக்கு ரோகித், கோலி கண்டிப்பாக தேவை – பிரக்யான் ஓஜா!
இந்தப் போட்டியில், நியூசிலாந்து அணி டாஸ் வென்று பவுலிங் செய்தது. அதன்படி பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. இதில், பாகிஸ்தான் தொடக்க வீரர் சைம் ஆயுப் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். பாபர் அசாம் 19 ரன்கள் எடுக்க, ஃபகர் ஜமான் 9 ரன்கள் எடுத்தார். கடைசி வரை அதிரடியாக விளையாடிய முகமது ரிஸ்வான் 90 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக பாகிஸ்தான் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியில் ஃபின் ஆலன், டிம் சீஃபர்ட், வில் யங் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து டேரில் மிட்செல் மற்றும் கிளென் பிலிப்ஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்து பாகிஸ்தான் பவுலர்களுக்கு தண்ணி காட்டினர். மிட்செல் 44 பந்துகளில் 2 சிக்ஸர், 7 பவுண்டரி உள்பட 72 ரன்கள் எடுத்தார்.
24 மணி நேரத்தில் க்யூப்ஸ் 9732 எண்ணிக்கையுடன் கின்னஸ் உலக சாதனை படைத்த சென்னை மாணவர் கனிஷ்!
கிளென் பிலிப்ஸ் 52 பந்துகளில் 3 சிக்ஸ், 5 பவுண்டரி உள்பட 70 ரன்கள் சேர்க்க, 18.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து 159 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியைத் தொடர்ந்து வரும் 21 ஆம் தேதி இரு அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி நடக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்று உறுதி – தனிமைப்படுத்திக் கொண்ட டெவோன் கான்வே!