ஆசிய விளையாட்டு போட்டியில் முதல் முறையாக இந்தியா 100 பதக்கங்களை கைப்பற்றி புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது.
சீனாவின் ஹாங்சோவில் 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டி நடந்து வருகிறது. இதில், 45 நாடுகளைச் சேர்ந்த 12,000க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இதில், கபடி, கிரிக்கெட், வாலிபால், கால்பந்து, துப்பாக்கிச்சுடுதல், ஹாக்கி, படகுப் போட்டி, வில்வித்தை, குண்டு எறிதல், ஈட்டி எறிதல், தடகளப் போட்டி, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தடை தாண்டும் ஓட்டப் போட்டி, ஸ்குவாஷ், பேட்மிண்டன் என்று 40 வகையான விளையாட்டுகளில் கிட்டத்தட்ட 482 போட்டிகள் வரையில் நடத்தப்படுகிறது.
India vs Chinese Taipei: கபடியில் தங்கம் வென்ற இந்தியா – 100 பதக்கங்கள் கைப்பற்றி இந்தியா சாதனை!
இதுவரையில் இந்திய அணி 99 பதக்கங்களுடன் 4ஆவது இடத்தில் இருந்தது. இந்த நிலையில் தான் இன்று நடந்த பெண்களுக்கான கபடிப் போட்டியில் இந்தியா தங்கம் வென்றதன் மூலமாக 100ஆவது பதக்கத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. ஆசிய விளையாட்டில் முதல் முறையாக இந்தியா 100 பதக்கங்களை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
PAK vs NED: நேற்று அகமதாபாத், இன்று ஹைதராபாத் – வெறிச்சோடி காணப்பட்ட மைதானங்கள்!
அதுமட்டுமின்றி இந்த ஆண்டில் மட்டும் அதிக தங்கப் பதக்கமும், அதிக வெள்ளிப் பதக்கமும், அதிக வெண்கலப் பதக்கமும் கைப்பற்றியுள்ளது. கடந்த 2002 ஆம் ஆண்டு 36 பதக்கங்களை இந்தியா கைப்பற்றியிருந்தது. 2006 ஆம் ஆண்டு 56 பதக்கங்களும், 2010 ஆம் ஆண்டு 65 பதக்கங்களும், 2014 ஆம் ஆண்டு 57 பதக்கங்களும், 2018 ஆம் ஆண்டு 70 பதக்கங்களும் கைப்பற்றிய நிலையில், தற்போது 100 பதக்கங்களை கைப்பற்றி புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது. அடுத்து நடக்க இருக்கும் 2027 ஆம் ஆண்டில் இந்தியா இதை விட அதிக பதக்கங்களை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிய விளையாட்டில் இந்தியாவிற்கு தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை பெற்றுக் கொடுத்து இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு ஏசியாநெட் தமிழ் இணையதளம் வாயிலாக வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
India in Asian Games since 2000:
2002 - 36 medals.
2006 - 53 medals.
2010 - 65 medals.
2014 - 57 medals.
2018 - 70 medals.
2023 - 100* medals.
The improvement in Indian sporting rise is just incredible.....!!! pic.twitter.com/nSe5oBEJsD
ஆசிய விளையாட்டில் இந்தியா 100 பதக்கங்களை கைப்பற்றியதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: "ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு ஒரு முக்கியமான சாதனை! 100 பதக்கங்கள் என்ற குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியதில் இந்திய மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்...," என்று பிரதமர் ட்வீட் செய்துள்ளார்.
A momentous achievement for India at the Asian Games!
The people of India are thrilled that we have reached a remarkable milestone of 100 medals.
I extend my heartfelt congratulations to our phenomenal athletes whose efforts have led to this historic milestone for India.… pic.twitter.com/CucQ41gYnA