
இந்தியா நடத்தும் 13ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கியது. இதில், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியும், நியூசிலாந்து அணியும் மோதின. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசியது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து, 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் குவித்தது.
இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து, 36.2 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 283 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதுமட்டுமின்றி தொடக்க வீரர் டெவான் கான்வே 152 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 123 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.
ஏற்கனவே தொடக்க விழா ரத்து செய்யப்பட்டது. சரி, அகமதாபாத்தில் ரசிகர்களின் வருகை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், மைதானமே வெறிச்சோடி காணப்பட்டது. இதில் பராமரிப்பின்றி இருக்கைகள் வேறு. கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரசிகர்கள் வரையில் அமரக் கூடிய இந்த மைதானத்தில் பத்து சதவிகிதம் கூட ரசிகர்கள் இல்லை. இதில், 40000 பெண்களுக்கு இலவச டிக்கெட் வழங்கப்படும் என்று கூறப்பட்டது.
India vs Japan: நடப்பு சாம்பியன் ஜப்பானை வீழ்த்தி இந்தியா ஹாக்கி டீம் தங்கம் கைப்பற்றி சாதனை!
ரசிகர்களின் வருகை இல்லாததால், மைதானத்தில் ரசிகர்களுக்கு இலவச குடிநீர் மற்றும் உணவு வழங்கப்படும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்தார். பொதுவாக இங்கிலாந்து விளையாடும் போட்டிகளுக்கு இங்கிலாந்து ரசிகர்களின் வருகை அதிகமாக இருக்கும். ஆனால், இங்கு அப்படியில்லை. காரணம், ஒரு மாதத்திற்கு முன்னதாக தயாரிக்கப்பட்ட அட்டவணை.
இதில், ஒரு மாற்றங்களும் செய்யப்பட்டது. மேலும், விமான போக்குவரத்து, விடுதி வசதியும் இல்லை. இதன் காரணமாக வெளிநாட்டு ரசிகர்களின் வருகை குறைந்துள்ளது. சிலர் இந்திய அணி முதல் போட்டியில் விளையாடாததால் தான் இது போன்ற நிலைமை என்று கூறி வருகின்றனர். சரி இங்கிலாந்து, நியூசிலாந்து போட்டிக்கு தான் இந்த நிலைமை என்றால், நேற்று நடந்த பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து போட்டிக்கு ரசிகர்களின் வரவே இல்லை.