ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை - 15 ஆண்டுகளுக்குப் பின் சாம்பியன் ஆனது இந்தியா..!!!

 
Published : Dec 19, 2016, 11:34 AM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை - 15 ஆண்டுகளுக்குப் பின் சாம்பியன் ஆனது இந்தியா..!!!

சுருக்கம்

உலகக் கோப்பை ஜூனியர் ஹாக்கி பிரிவில் இந்திய ஆடவர் அணி 15 ஆண்டுகளுக்கு பின் 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி புதிய வரலாற்று சாதனை படைத்தது.

லக்னோவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் பெல்ஜியம் அணியை 2-1 என்ற கோல்கணக்கில் சாய்த்து அந்த சாதனையை இந்திய ஆடவர் அணி படைத்தனர். அதுமட்டுமல்லால் போட்டியை நடத்திய நாடு கோப்பையை வெல்வது இதுதான் முதல்முறையாகும்.

உத்தரப்பிரதேசம், லக்னோவில் உள்ள மேஜர் தயான்சந்த் அரங்கில், 11-வது ஜூனியர் ஹாக்கிப் போட்டி நடந்து வந்தது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம் உள்ளிட்ட 16 அணிகள் கலந்து கொண்டன. காலிறுதியில் ஸ்பெயின் அணியையும், அரை இறுதியில் வலிமையான ஆஸ்திரேலியா அணியையும் தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறியது. 

லக்னோவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில், இந்தியாவை எதிர்த்து களம் கண்டது பெல்ஜியம் அணி. போட்டி தொடங்கியதில் இருந்து இந்திய வீரர்களின் மெதுவாக ஆட்டத்தை தங்களின் பக்கம் திருப்பினர்.

ஆட்டத்தின் 8-வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பை இந்திய வீரர் குர்ஜந்த் சிங் அருமையான கோலாக மாற்றி அணியை 1-0 என முன்னிலைப்படுத்தினார். அதன்பின், பெல்ஜியம் வீரர்கள் கொடுத்த நெருக்கடியை எளிதாக இந்திய வீரர்கள் சமாளித்தனர்.

ஆட்டத்தின் 2-வது கால் பகுதியான 22-வது நிமிடத்தில் இந்திய வீரர் சிம்ரன் ஜீத் சிங் தனது பங்குக்கு பெனால்டி கார்னர் பகுதியில் இருந்து கிடைத்த வாய்ப்பை கோலாக்கி அணியை 2-0 என்ற கோல்கணக்கில் முன்னெடுத்தார்.

அதன்பின், 3-வது கால்பகுதி முழுவதும் இந்திய வீரர்கள் கட்டுப்பாட்டில் இருந்ததால், பெல்ஜியம் வீரர்களின் எந்த முயற்சியும் பலிக்கவில்லை.  4-வது கால்பகுதியில், 70-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணி வீரர் பேப்ரிஸ் வேன் போக்ரிஜிக் பெனால்டி கார்னரில் கோல் அடித்து அணியை 1-2 என்று முன்னெடுத்தார்.

ஆனால், ஆட்டம் கடைசி வரை இந்திய வீரர்களின் கட்டுப்பாட்டில் இருந்ததால், பெல்ஜியம் வீரர்களால் தொடர்ந்து கோல் அடிக்க முடியவில்லை. இதையடுத்து, பெல்ஜியத்தை 1-2 என்ற கணக்கில் இந்திய அணி வென்று 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

கடந்த 2001-ம் ஆண்டுக்குப் பின்,  15 ஆண்டுகால இடைவெளியில் பெறும் 2-வது முறையாக இந்திய அணி மகுடம் சூடுகிறது. இதற்கு முன், கடந்த 2001-ல் ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில் நடந்த போட்டியில் சாம்பியன் பட்டத்தை இந்தியா வென்று இருந்தது.

அதுமட்டுமல்லாமல், மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அதில் 2 முறை கோப்பையையும் இந்திய அணி வென்றது. இதற்கு முன் கடந்த 1997-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த இறுதிப்போட்டியில், ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து, இந்திய அணி 2-ம் இடம் பெற்றது.

கடந்த முறை உலகக்கோப்பைப் போட்டியில் மிகவும் மோசமாக விளையாடி 13-வது இடம் பிடித்த இந்திய அணி இந்த முறை சாம்பியன் பட்டம் வென்று ஹாக்கி உலகத்தையே அசத்தியுள்ளது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

33 பந்துகளில் சதம் விளாசிய இஷான் கிஷன்.. சிக்சர் மழை.. ஒரே ஒரு பந்தில் மிஸ்ஸான வரலாற்று சாதனை!
வைபவ் சூர்யவன்ஷி மீண்டும் மின்னல் வேக சதம்.. 14 வயதில் டி வில்லியர்ஸ் சாதனையை தூள் தூளாக்கி மாஸ்!