ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி – வெற்றியோடு தொடங்கிய இந்தியா: ஹாட்ரிக் கோல் அடித்த ஆரைஜீத் சிங் ஹண்டால்!

By Rsiva kumar  |  First Published Dec 5, 2023, 9:43 PM IST

மலேசியாவில் இன்று தொடங்கிய 13ஆவது ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் தென் கொரியாவிற்கு எதிரான போட்டியில் இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.


ஆண்டுதோறும் நடக்கும் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் 13ஆவது சீசன் இன்று மலேசியாவின் கோலாலம்பூரில் பிரம்மாண்டமாக தொடங்கியது. மலேசியாவின் தேசிய ஹாக்கி ஸ்டேடியத்தில் தொடங்கிய இந்த ஹாக்கி தொடரானது வரும், 16ஆம் தேதி வரையில் நடக்கிறது. இந்த தொடரில், 16 அணிகள் இடம் பெற்று 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதுகின்றன. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

IPL 2024 Auctioneer: முதல் முறையாக ஐபிஎல் 2024 ஏலத்தை நடத்தும் மல்லிகா சாகர்!

Tap to resize

Latest Videos

இதில், ஏ பிரிவில் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, சிலி, மலேசியா ஆகிய அணிகளும் பி பிரிவில் எகிப்து, பிரான்ஸ், தென் ஆப்பிரிக்கா, ஜெர்மனி ஆகிய அணிகளும், சி பிரிவில் இந்தியா, தென் கொரியா, ஸ்பெயின், கனடா ஆகிய அணிகளும், டி பிரிவில் பெல்ஜியம், நெதர்லாந்து, நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

Pakistan National T20: ஸ்ட்ரெச்சர் இல்லாததால் காயமடைந்த ஷதாப் கானை அலேக்காக முதுகில் தூக்கி சென்ற சக வீரர்!

இன்று நடந்த முதல் போட்டியில் மலேசியா மற்றும் சிலி அணிகள் மோதின. இதில், மலேசியா 7-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. 2 ஆவது போட்டியில் இந்தியா மற்றும் தென் கொரியா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி வீரர் ஆரைஜீத் சிங் ஹண்டல் ஹாட்ரிக் கோல் அடிக்கவே இந்திய அணி 4-2 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.

போட்டி தொடங்கிய 11, 16 மற்றும் 41 நிமிடங்களில் ஹண்டல் அடுத்தடுத்து கோல் அடித்தார். இதையடுத்து, அமன்தீப் அடுத்த 30 ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்கவே இந்தியா 4 புள்ளிகள் பெற்றது. தென் கொரியா வீரர்கள் டோஹ்யுன் லிம் மற்றும் மின்க்வோன் கிம் ஆகியோர் முறையே 38 மற்றும் 45 நிமிடங்களில் கோல் அடித்தனர். இறுதியாக இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதையடுத்து வரும் 7ஆம் தேதி இந்தியா மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையிலான அடுத்த போட்டி நடக்கிறது. இந்தப் போட்டி மாலை 5.30 மணிக்கு தொடங்கிறது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நிலையில் நீங்கள் இருந்தால் உதவி செய்யுங்கள் – டேவிட் வார்னர் வேண்டுகோள்!

click me!