ஆர்மீனியாவின் யெரெவனில் நடந்த ஜூனியர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் ஒரே நாளில் இந்தியா 3 வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளது.
ஜூனியர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 3 வெள்ளிப் பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. கடந்த மாதம் நவம்பர் 24 ஆம் தேதி முதல் ஆர்மீனியாவின் யெரெவனில் ஜூனியர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில், 58 நாடுகளைச் சேர்ந்த 448 குத்துச்சண்டை வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
Chennai Floods: மிக்ஜம் புயல் பாதிப்பு - சென்னை மக்களுக்கு தைரியம் கொடுத்த ஹர்பஜன் சிங்!
இதில், நேற்று நடந்த மகளிருக்கான 54 கிலோ எடைப்பிரிவில் ஜார்க்கண்டைச் சேர்ந்த மணீஷா கெர்கெட்டா இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆண்களுக்கான 80 கிலோ எடைப்பிரிவில் ஹர்திக் பன்வார் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதே போன்று மற்றொரு போட்டியில் 80 கிலோ பிரிவில் பிராச்சி டோகாஸ் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார்.
இதையும் படிங்க;- போர்க்கால அடிப்படையில் நிவாரணம்... 7 அமைச்சர்களுக்குக் கூடுதல் பொறுப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின்
இதற்கிடையே ஸ்ருஷ்டி (63 கிலோ), நிஷா (52 கிலோ), சாஹல் (75 கிலோ), வினி (57 கிலோ), அகன்ஷா (70 கிலோ), மேகா (80 கிலோ), ஜதின் (54 கிலோ), ஹேமந்த் (80 கிலோ), பயல் (48 கிலோ) ஆகியோர் தங்களது பிரிவில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியா ஏற்கனவே 5 வெண்கலம் வென்றுள்ள நிலையில், மொத்தம் 17 பதக்கங்களை உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பண்ணை வீட்டில் வளர்க்கும் குதிரைக்கு பாசமாக உணவு கொடுக்கும் தோனி – வைரலாகும் வீடியோ!