Chennai Floods: மிக்ஜம் புயல் பாதிப்பு - சென்னை மக்களுக்கு தைரியம் கொடுத்த ஹர்பஜன் சிங்!

By Rsiva kumar  |  First Published Dec 5, 2023, 11:23 AM IST

மிக்ஜம் புயல் பாதிப்பைகளை கொடுத்தாலும், மன உறுதியையும், ஒற்றுமையையும் வெளிக்கட்ட வாய்ப்பையும் சேர்த்தே கொடுக்கிறது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் மக்களுக்கு தைரியம் கொடுத்துள்ளார்.


மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் மாலை முதல் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக கிண்டி, கேகே நகர், எழும்பூர், மாம்பலம், வேளச்சேரி, அண்ணா நகர், ஆதம்பாக்கம், பரங்கிமலை, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை என்று நகரின் பெரும்பகுதி வெள்ளம் சூழ்ந்தது.

இதையும் படிங்க;-  போர்க்கால அடிப்படையில் நிவாரணம்... 7 அமைச்சர்களுக்குக் கூடுதல் பொறுப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின்

இந்த புயல் பாதிப்புகளை கொடுத்தாலும் மனவுறுதியையும், ஒற்றுமையையும் வெளிக் காட்ட வாய்ப்பையும் சேர்த்தே கொடுக்குது.சென்னை மக்களே உங்க சக்தியே தலைக்கு மேல வெள்ளம் போனாலும் தைரியமா ஒண்ணுக்குள்ள ஒண்ணா சேர்ந்து நின்னு ஜெயிக்கிறது தான். தைரியமா இருங்க

— Harbhajan Turbanator (@harbhajan_singh)

Tap to resize

Latest Videos

 

மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. செல்போன் சிக்னலும் முடங்கியது. ரயில் சேவை, விமான சேவையும் ரத்து செய்யப்பட்டது. ஒரே இரவில் சென்னையே தலைகீழாக காணப்பட்டது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை விட இந்த ஆண்டில் மிக்ஜம் புயல் காரணமாக சென்னை நகரின் பெரும்பகுதி வெள்ளம் சூழ்ந்தது. இதனால், சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

Chennai Heavy Rain:தலைநகரை தலைகீழாக புரட்டிபோட்ட கனமழை! மீண்டும் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம்!
இந்த நிலையில், சென்னை மக்களுக்கு தைரியம் கொடுக்கும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: இந்த புயல் #CycloneMichaung பாதிப்புகளை கொடுத்தாலும் மனவுறுதியையும், ஒற்றுமையையும் வெளிக் காட்ட வாய்ப்பையும் சேர்த்தே கொடுக்குது.சென்னை மக்களே உங்க சக்தியே தலைக்கு மேல வெள்ளம் போனாலும் தைரியமா ஒண்ணுக்குள்ள ஒண்ணா சேர்ந்து நின்னு ஜெயிக்கிறது தான். தைரியமா இருங்க #ChennaiFloods என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க;- ரொம்ப கேவலமா இருக்கு மேயர் பிரியா.. எம்எல்ஏ காணோம்.. வரி என்னாச்சு.! கடுப்பான நடிகர் விஷால்..

click me!