
சீனாவில் ஹாங்சோவ் நகரில் வரும் 23 ஆம் தேதி ஆசிய விளையாடு போட்டிகள் தொடங்குகிறது. ஆனால், அதற்கு முன்னதாகவே, கால்பந்து, கிரிக்கெட், வாலிபால், பீச் வாலிபால் உள்ளிட்ட சில போட்டிகள் இன்று தொடங்கியது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்தப் போட்டியானது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகளுக்கு அடுத்தபடியான மிகப்பெரிய விளையாட்டு போட்டியாக பார்க்கப்படுகிறது.
இதுவரையில், இந்தியா ஆசிய விளையாட்டு போட்டிகளில் 672 பதக்கங்களை வென்று 5 ஆவது இடத்தில் உள்ளது. ஆண்களுக்கான வாலிபால் போட்டியில் இந்தியா மற்றும் கம்போடியா அணிகள் மோதின. இதில், ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய இந்திய அணி வீரர்கள் முதல் 3 செட்டுகளை கைப்பற்றி வெற்றி பெற்றனர்.
கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில் புஜாராவுக்கு தடை: இங்கிலாந்து கட்டுப்பாட்டு வாரியம்!
அதாவது, 25-14, 25-13 மற்றும் 25-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா முதல் வெற்றியை பதிவு செய்து இந்த தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இதே போன்று நடந்து வரும் கால்பந்து போட்டியில் இந்தியா மற்றும் சீனா அணிகள் விளையாடி வருகின்றன. இதில், போட்டி தொடங்கிய முதல் 17ஆவது நிமிடத்தில் சீனா முதல் கோல் அடித்தது. அதன் பிறகு முதல் அரை மணி நேரத்தில் இந்திய அணி கோல் அடிக்கவே இல்லை. பின்னர் சுதாரித்துக் கொண்டு ஆடிய இந்தியா 47ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து 1-1 என்று சமன் செய்தது. அதன் பிறகு மீண்டும் சீனா அடுத்தடுத்து கோல் அடிக்கவே 4-1 என்று முன்னிலை பெற்று விளையாடி வருகிறது
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.