கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில் புஜாராவுக்கு தடை: இங்கிலாந்து கட்டுப்பாட்டு வாரியம்!

Published : Sep 19, 2023, 03:49 PM IST
கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில் புஜாராவுக்கு தடை: இங்கிலாந்து கட்டுப்பாட்டு வாரியம்!

சுருக்கம்

சட்டேஷ்வர் புஜாராவிற்கு கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாட இங்கிலாந்து கட்டுபாட்டு வாரியம் தடை விதித்துள்ளது.

இங்கிலாந்தில் உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரான கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. இதில், பல்வேறு மாநில கவுண்டி அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றன. இதில், ஒவ்வொரு அணியும் ஒரு போட்டியில் 2 வெளிநாட்டு வீரர்களை பயன்படுத்திக் கொள்ள முடியும். அந்த வகையில் இந்திய வீரர்களான சட்டேஷ்வர் புஜாரா சசெக்ஸ் கவுண்டி கிரிக்கெட் கிளப் அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். அதுவும் அவர் தான் சீனியர் வீரர் என்பதால், அந்த அணி அவரை கேப்டனாக அறிவித்தது.

World Cup 2023: அமிதாப் பச்சன், சச்சினைத் தொடர்ந்து ரஜினிகாந்திற்கு கோல்டன் டிக்கெட் வழங்கிய ஜெய் ஷா!

சசெக்ஸ் கவுண்டி கிரிக்கெட் கிளப் அணியானது டிவிஷன் 2 எனும் பிரிவில் இடம் பெற்று விளையாடி வருகிறது. இந்தப் பிரிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணி அடுத்த டிவிஷனுக்கு முன்னேறும். கடந்த 10 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரையில் சசெக்ஸ் – லெய்சஸ்டர்ஷயர் அணிகளுக்கு இடையில் ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அதில் சசக்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 262 ரன்கள் எடுத்தது. இதையடுத்து பேட்டிங் ஆடிய லெய்சஸ்டர்ஷயர் அணி 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

World Cup Golden Ticket: கோல்டன் டிக்கெட் என்றால் என்ன? உலகக் கோப்பை கிரிக்கெட்டில் யாருக்கு அது வழங்கப்படும்?

பின்னர் ஆடிய சசெக்ஸ் கவுண்டி கிரிக்கெட் கிளப் அணியானது பேட்டிங் செய்து 344 ரன்கள் எடுத்ததன் மூலமாக லெய்சஸ்டர்ஷயர் அணிக்கு 499 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஒருகட்டத்தில் லெய்சஸ்டர்ஷயர் அணிக்கு அதிக வெற்றி வாய்ப்புகள் இருந்தது. அப்போது, சசெக்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஜாக் கார்சன், லெய்சஸ்டர்ஷயர் அணியின் பேட்ஸ்மேனான பென் காக்ஸ் ரன் எடுக்க ஓடிய போது அவரது காலை தட்டி விட்டுள்ளார். இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சசெக்ஸ் அணியின் கேப்டனான புஜாராவிற்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.

ODI World Cup 2023: ஷதாப் கானுக்கு வாய்ப்பு மறுப்பு? உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் டீமில் யாருக்கு இடம்?

புஜாரா எந்த தவறும் செய்யாத நிலையில், அவரது அணி வீரர்கள் செய்த தவறுக்கு அவருக்கும் சேர்த்து கேப்டன் என்ற முறையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. உண்மையில், புஜாரா எந்த தவறும் செய்யாத நிலையில், வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில், ஜாக் கார்சன் இது போன்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், ஜாக் கார்சன் மற்றும் டாம் ஹெய்ன்ஸ் ஆகியோருக்கு இன்று நடக்கும் போட்டியில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு, சசெக்ஸ் அணிக்கு 12 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

India vs Australia: இந்தியாவிற்கு நல்ல வாய்ப்பு: ஆஸ்திரேலியாவை தோற்கடிக்குமா இந்தியா?

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

ஆஸ்திரேலியாவில் முதல் சதம் விளாசிய 'ரன் மெஷின்' ஜோ ரூட்! ஆஷஸ் டெஸ்ட்டில் அசத்தல்!
IND vs SA 3வது ஓடிஐ..இந்திய அணியில் 2 மாற்றங்கள்.. தமிழக வீரர் நீக்கம்.. பிளேயிங் லெவன் இதோ!