Ind vs Srilanka: இந்திய அணிக்கு வில்லனாக மாறிய ரோகித் சர்மா.? இந்த வீரர் இருந்திருந்தால் நேற்று கதையே வேற.?

By Ezhilarasan BabuFirst Published Sep 7, 2022, 1:40 PM IST
Highlights

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 4 சுற்றில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 4 சுற்றில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த சுற்றில் ஏற்கனவே பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியடைந்துள்ள நிலையில் இந்த தொடரில் இருந்து வெளியேறும் நிலைக்கே இந்தியா தள்ளப்பட்டுள்ளது. 

அடுத்து வரும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா வென்றாலும் மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை வைத்த இந்தியாவுக்கு இறுதிப் போட்டி வாய்ப்பு கிடைக்கலாம், அதிலும் இன்று நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் அணியை ஆப்கானிஸ்தான் வெல்லும் பட்சத்தில் ஓரளவுக்கு இந்துயாவுக்கு வாய்ப்பு இருக்கலாம் என கூறப்படுகிறது.

இதுவரையில் நடந்த போட்டியில் இந்தியா சந்தித்த தோல்விகளுக்கு பல வீரர்கள் காரணமாக இருந்துள்ளனர். அதேபோல் கேப்டன் ரோகித் சர்மாவும் நேற்று நடந்த ஆட்டத்தின் தோல்விக்கு வில்லனாக அமைந்து விட்டார் என்ற விமர்சனமும் உள்ளது. அவர் எடுத்த தவறான முடிவால் இந்திய அணி தோல்வியை சந்தித்தது என்றே கூறப்படுகிறது.

அதாவது ஒரு போட்டியின் வெற்றி தோல்வி அந்த அணியில் இடம் பெறும் வீரர்களை பொறுத்து உள்ளது.  எனவே ஒவ்வொரு வீரரையும் கவனமாக தேர்வு செய்ய வேண்டும் எனபது விதி, அந்த கடமை அணியில் கேப்டனிடமே உள்ளது. அதிலும் எப்போதும் இல்லாத அளவுக்கு ஒவ்வொரு போட்டியிலும் இந்திய அணியின் வீரர்கள் மாறிக் கொண்டே இருந்தனர், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இளம் வீரர்  ரவி பிஷ்னோய்  மிகச் சிறப்பாக விளையாடினார்.

இதையும் படியுங்கள்: ஆசிய கோப்பை: இந்தியாவை வீழ்த்தி ஃபைனலில் ஒரு காலை வைத்த இலங்கை..! தொடரை விட்டு வெளியேறியது இந்தியா

ஆனால் ரோகித் சர்மா இலங்கைக்கு எதிரான போட்டியில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை, அவர் அணியிலிருந்து தூக்கி எறியப்பட்டார், பாகிஸ்தானுக்கு எதிராக ரவி சிறப்பாக பந்து வீசினார், ஆனால் அவருக்கு நேற்றைய போட்டியில் வாய்ப்பு கொடுக்காதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் அவருக்கு மாற்றாக அஸ்வின் அணியில் சேர்க்கப்பட்டார் கடந்த போட்டிகளில் மிக மோசமாக விளையாடிய  யுஸ்வேந்திர சாஹலுக்கும் கூட வாய்ப்பு வழங்கப்பட்டது, ஆனால் பிஷ்னோய்க்கு இல்லை.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் அவேஷ் கானுக்கு மாற்றமாகவே இளம் சுழற்பந்து  வீச்சாளர் ரவி பிஷ்நோய் அணியில் சேர்க்கப்பட்டார், அவர் விளையாடிய மிகப்பெரிய ஆசிய கோப்பை போட்டி இதுவாகும், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில்  சாஹலின் பந்தை பாகிஸ்தான் வீரர்கள் அடித்தது துவம்சம் செய்தனர், அவர் நான்கு ஓவர்களுக்கு 43 ரன்களை கொடுத்து 1 விக்கெட் எடுத்தார்.ஆனால் ரவி பிஷ்னோய் 4 ஓவர்கள் வீசி வெறும் 26 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார், சாஹலை விட சிறப்பாகவே அவர் பந்து வீசினார்.

இதையும் படியுங்கள்: ரோஹித் சர்மா அதிரடி அரைசதம்.. மீண்டும் சொதப்பிய மிடில் ஆர்டர்.! இலங்கைக்கு சவாலான இலக்கை நிர்ணயித்த இந்தியா

ரவி பிஷ்னோய் இதுவரை 10- டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார், குறைந்த அனுபவமே இருந்தாலும் ஆசிய கோப்பை தொடரில் அவர் இடம்பிடித்தார், ரவி பிஷ்னோய் இந்த 10 போட்டிகளில் 7.53  என்ற சராசரியில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். நேற்று நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வீரர்கள்  விக்கெட் எடுக்க முடியாமல் திணறினார்,  நிச்சயம்  ரவி பிஷ்னோய் இடம் பெற்றிருந்தால் அவர் சிறப்பாக பந்துவீசி இருப்பார் என பலரும் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர்.

பேட்டிங் வரிசையிலும் பாகிஸ்தானுக்கு எதிராக கடைசி 2 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள் விளாசினார், ஆனால் நேற்று இலங்கைக்கு எதிரான போட்டியில் கடைசி நேரத்தில் ரன் எடுக்க முடியாமல் பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்தனர். இந்தளவில்தான் நேற்றைய இலங்கை அணியிடம் இந்தியா போராடி தோல்வியை சந்தித்துள்ளது, இந்நிலையில் ஆசிய கோப்பையில் இருந்து இந்திய அணி கிட்டத்தட்ட வெளியேறி விட்டது என்றே கூறலாம்.

சரியான டீம் செலக்சன் இல்லாமை, திறமையானவர்களை அறிந்து வாய்ப்பு கொடுக்க தவறியதே தோல்விக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. இந்த வகையில் நேற்றைய போட்டியில் ரவி பிஷ்னோய்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கலாமு என பலரும் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர். 
 

click me!