ஆசிய கோப்பையிலிருந்து விலகிய ஆவேஷ் கான்.. மாற்று வீரர் அறிவிப்பு

By karthikeyan VFirst Published Sep 6, 2022, 10:09 PM IST
Highlights

ஆசிய கோப்பையிலிருந்து ஆவேஷ் கான் விலகியுள்ளார். அவருக்கு மாற்று வீரராக தீபக் சாஹர் எடுக்கப்பட்டுள்ளார்.
 

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்தியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. 

சூப்பர் 4 சுற்றில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்ற இலங்கையும், பாகிஸ்தானிடம் தோற்ற இந்தியாவும் இன்றைய போட்டியில் ஆடிவருகின்றன. ஃபைனலுக்கு முன்னேற கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இலங்கைக்கு எதிராக ஆடிவருகிறது இந்திய அணி.

இதையும் படிங்க - யாருப்பா உனக்கு மெசேஜ் பண்ணலைனு சொல்ற.. அவங்ககிட்ட நேரடியா கேட்க வேண்டியதுதானே? கோலியை விளாசிய கவாஸ்கர்

இந்நிலையில், ஆசிய கோப்பையிலிருந்து காய்ச்சல் காரணமாக ஆவேஷ் கான் விலகியுள்ளார். ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் காயம் காரணமாக பும்ரா, ஹர்ஷல் படேல் ஆகிய இருவரும் ஆடாததால் ஆவேஷ் கான் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்தார்.

ஆசிய கோப்பை லீக் சுற்றின் 2 போட்டிகளிலும் ஆடிய ஆவேஷ் கான், பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளுக்கு எதிராக தலா ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். ஹாங்காங் அணிக்கு எதிராக 53 ரன்களை வாரி வழங்கினார். அதனால் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆடாத ஆவேஷ் கான், இன்று இலங்கைக்கு எதிராக நடந்துவரும் போட்டியிலும் ஆடவில்லை. 

இதையும் படிங்க - பக்கா பிளானுடன் ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெற்ற சுரேஷ் ரெய்னா..! அந்நிய மண்ணில் அதகளம் செய்யப்போகும் சின்ன தல

இந்நிலையில், காய்ச்சல் காரணமாக ஆசிய கோப்பையிலிருந்து ஆவேஷ் கான் விலக, அவருக்கு மாற்று வீரராக தீபக் சாஹர் சேர்க்கப்பட்டுள்ளார். தீபக் சாஹர் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் ரிசர்வ் வீரராக அணியுடனேயே இருந்தார். ஆவேஷ் கான் விலகியதால், இந்திய அணியின் 15 வீரர்களை கொண்ட இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.

click me!