IND vs AFG உலகக் கோப்பை போட்டி : ஒருவரை ஒருவர் தாக்கி கடும் சண்டையில் ஈடுபட்ட ரசிகர்கள்.. வைரல் வீடியோ

By Ramya s  |  First Published Oct 12, 2023, 2:38 PM IST

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது அருண் ஜெட்லி மைதானத்தில் ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. 


நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இந்திய அணி தொடர்ந்து இரண்டு வெற்றிகளைப் பதிவு செய்ததன் மூலம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நேற்றைய போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா, ரன் ரேட் அடிப்படையில் பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி தற்போது 2-வது இடத்தை பிடித்துள்ளது.

 

Tap to resize

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

ஆனால், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது அருண் ஜெட்லி மைதானத்தில் ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இந்த சண்டைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்றாலும்,  ரசிகர்கள் ஒருவரையொருவர் குத்திவதும், அறைவதும் போல போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

 

Big fight at Delhi Ground and Haters says there isn't any crowd. Seems like is around the corner.pic.twitter.com/NA4aPDg62x

— ICT Fan (@Delphy06)

நேற்று நடந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாகிடி 80 ரன்களும், அஷ்மதுல்லா உமர்சாய் 62 ரன்களும் எடுத்தனர். 273 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷான் இருவரும் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் சேர்ந்து 156 ரன்கள் அடித்தனர். இஷான் கிஷான், இந்தப் போட்டியில் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் ஜோடி சேர்ந்து விளையாடினர். சர்மா, 84 பந்துகளில் 16 பவுண்டரி 6 சிக்சர்கள் உள்பட 131 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 

IND vs AFG: ரன் ரேட்டில் பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி புள்ளிப்பட்டியில் 2ஆவது இடம் பிடித்த இந்தியா!

பின்னர் களமிறங்கிய, ஷ்ரேயாஸ் ஐயர் 25 ரன்கள் எடுக்க, விராட் கோலி இந்தியாவில் 50ஆவது அரைசதம் அடித்தார். கடைசியாக விராட் கோலி பவுண்டரி அடித்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார். இந்தப் போட்டியில் இந்திய அணி 35 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து 273 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. மேலும், இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடி குறைந்த ஓவர்களில் வெற்றி பெற்றதன் மூலமாக நெட் ரன் ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி இந்தியா 2 ஆவது இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!