ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான 10ஆவது லீக் போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.
இந்தியாவில் 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், இதுவரையில் 9 லீக் போட்டிகள் நடந்துள்ளன. இந்தப் போட்டியில் நியூசிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் நடந்த 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் 3 இடங்களை பிடித்துள்ளன.
IND vs AFG: ரன் ரேட்டில் பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி புள்ளிப்பட்டியில் 2ஆவது இடம் பிடித்த இந்தியா!
இலங்கை மற்றும் நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான் விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்து கடைசி 3 இடங்களை பிடித்துள்ளன. புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும். இந்த நிலையில், தான் இன்றைய 10 ஆவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே இந்தியாவிற்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இதே போன்று, இலங்கைக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் தான் இன்றைய போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுவரையில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா விளையாடிய 108 போட்டிகளில் ஆஸ்திரேலியா 50 போட்டியிலும், தென் ஆப்பிரிக்கா 54 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. மூன்று போட்டிகள் டையில் முடிந்துள்ளது. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை.
இதுவே ஒரு நாள் உலகக் கோப்பையில் இரு அணிகளும் 6 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், 3 போட்டியில் ஆஸ்திரேலியாவும், 2 போட்டியில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது. ஆஸ்திரேலியா அதிகபட்சமாக 377 ரன்கள் குவித்தது. குறைந்தபட்சமாக 153 ரன்கள் எடுத்தது. இதே போன்று தென் ஆப்பிரிக்கா அதிகபட்சமாக 325 ரன்கள் குவித்தது. குறைந்தபட்சமாக 149 ரன்கள் குவித்தது.