ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 35 ஓவர்களில் 273 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலமாக ரன் ரேட் அடிப்படையில் பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி இந்தியா 2ஆவது இடம் பிடித்துள்ளது.
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான கிரிக்கெட் உலகக் கோப்பையின் 9 ஆவது லீக் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்று முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாகிடி 80 ரன்களும், அஷ்மதுல்லா உமர்சாய் 62 ரன்களும் எடுத்தனர்.
undefined
இதையடுத்து எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷான் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா, பல சாதனைகளை படைத்தார். ரோகித் சர்மா 19 இன்னிங்ஸ்களில் விளையாடிய 1000 ரன்களை கடந்தார். மேலும், 3 சிக்ஸர்கள் அடித்ததன் மூலமாக சர்வதேச கிரிக்கெட்டில் கிறிஸ் கெயிலின் அதிக 553 சிக்ஸர்கள் சாதனையை முறியடித்தார். ஒரு கட்டத்தில் 63 பந்துகளில் ரோகித் சர்மா உலகக் கோப்பையில் 7ஆவது சதத்தை பதிவு செய்தார். இதன் மூலமாக உலகக் கோப்பையில் அதிக சதங்கள் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.
ஏற்கனவே ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் போட்டியில் கோல்டன் டக் அவுட்டில் வெளியேறிய இஷான் கிஷான், இந்தப் போட்டியில் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் ஜோடி சேர்ந்து விளையாடினர். சர்மா, 84 பந்துகளில் 16 பவுண்டரி 6 சிக்சர்கள் உள்பட 131 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு ஷ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினார்.
இதில், ஷ்ரேயாஸ் ஐயர் 25 ரன்கள் எடுக்க, விராட் கோலி இந்தியாவில் 50ஆவது அரைசதம் அடித்தார். மேலும், 110 இன்னிங்ஸில் 50ஆவது அரைசதம் அடித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் வீரர் எம்.எஸ்.தோனி 116 இன்னிங்ஸ்களில் 33 அரைசதங்கள் அடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் 160 இன்னிங்ஸ்களில் 58 அரைசதங்கள் அடித்திருக்கிறார்.
கடைசியாக விராட் கோலி பவுண்டரி அடித்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார். அவர் 56 பந்துகளில் 6 பவுண்டரி உள்பட 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். இந்தப் போட்டியில் இந்திய அணி 35 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து 273 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. மேலும், இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடி குறைந்த ஓவர்களில் வெற்றி பெற்றதன் மூலமாக நெட் ரன் ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி இந்தியா 2 ஆவது இடம் பிடித்துள்ளது.
நேற்று நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அதிரடியாக விளையாடி 48.2 ஓவர்களில் 345 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலமாக 2 போட்டிகளில் விளையாடி 2 போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகள் பெற்று +0.927 என்ற ரன் ரேட் அடிப்படையில் 2ஆவது இடத்தில் இருந்தது. ஆனால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 35 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து 273 ரன்கள் குவித்து வெற்றி பெற்ற இந்திய அணி 4 புள்ளிகளுடன் +1.500 என்ற ரன் ரேட் அடிப்படையில் பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி 2ஆவது இடம் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்தும் 2 போட்டிகளில் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் +1.958 என்று ரன் ரேட் அடிப்படையில் முதலிடத்தில் உள்ளது.
ஆட்டம் காட்டிய ஹஷ்மதுல்லா, உமர்சாய் – ஆப்கானிஸ்தான் 272 ரன்கள் குவிப்பு, பும்ரா 4 விக்கெட்!