
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஏற்கனவே ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதில், முதல் 2 போட்டிகளில் இடம் பெறாத ரோகித் சர்மா 3ஆவது ஒரு நாள் போட்டியில் இடம் பெற்று 81 ரன்கள் எடுத்தார். இந்த நிலையில் தான் உலகக் கோப்பையில் இந்திய அணி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இதில், முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 49.3 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பின்னர், எளிய இலக்கை துரத்திய இந்திய அணியில் இஷான் கிஷான் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார். ரோகித் சர்மாவும் ரன் எதும் எடுக்காமல் வெளியேறினார். அதன் பிறகு வந்த ஷ்ரேயாஸ் ஐயரும் டக் அவுட்டில் ஆட்டமிழந்தார். இதையடுத்து விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இருவரும் இணைந்து இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இறுதியாக இந்தியா 41.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இதையடுத்து உலகக் கோப்பையில் டக் அவுட்டில் வெளியேறிய ரோகித் சர்மாவை ரசிகர்கள் சகட்டுமேனிக்கு விமர்சிக்கத் தொடங்கினர். இந்த நிலையில், தான் இன்று ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அதற்கெல்லாம் சேர்த்து வைத்து வட்டியும், முதலுமாக கொடுத்துள்ளார். இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் குவித்தது.
ஆட்டம் காட்டிய ஹஷ்மதுல்லா, உமர்சாய் – ஆப்கானிஸ்தான் 272 ரன்கள் குவிப்பு, பும்ரா 4 விக்கெட்!
பின்னர் ஆடிய இந்திய அணியில் இஷான் கிஷான் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிற்கு ரோகித் சர்மா 131 ரன்களில் வெளியேறினார். இந்தப் போட்டியில் முதலில் 22 ரன்கள் எடுத்திருந்த போது குறைவான இன்னிங்ஸ்களில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். அதன் பிறகு சதம் அடித்ததன் மூலமாக உலகக் கோப்பையில் அதிக சதங்கள் (7) அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும், அதிவேகமாக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
மேலும், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்துள்ளார். இந்தப் போட்டியில் 5 சிக்ஸர்கள் அடித்ததன் மூலமாக சர்வதேச கிரிக்கெட்டில் 556 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.
That 💯 feeling! 📸📸#TeamIndia | #INDvAFG | #MeninBlue | #CWC23 pic.twitter.com/AyMwCfBMmv