உலகக் கோப்பையில் அதிக சதங்கள், அதிவேகமாக சதங்கள், அதிவேகமாக 1000 ரன்கள் என்று மொத்த சாதனைகளையும் ரோகித் சர்மா இன்றைய போட்டியின் மூலமாக படைத்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான கிரிக்கெட் உலகக் கோப்பையின் 9 ஆவது லீக் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்று முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாகிடி 80 ரன்களும், அஷ்மதுல்லா உமர்சாய் 62 ரன்களும் எடுத்தனர். பவுலிங்கில் ஜஸ்ப்ரித் பும்ரா 4 விக்கெட் கைப்பற்றினார். ஹர்திக் பாண்டியா 2 விக்கெட் கைப்பற்றினார்.
இதையடுத்து எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷான் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா, இந்தப் போட்டியின் மூலமாக 1000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
உலகக் கோப்பையை தொடக்கும் போது 17 இன்னிங்ஸ்களில் 978 ரன்கள் உடன் தொடங்கினார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான உலகக் கோப்பையின் 5ஆவது லீக் போட்டியில் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து இன்று 19ஆவது இன்னிங்ஸில் விளையாடினார். இதில், ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினார்.
ஆட்டம் காட்டிய ஹஷ்மதுல்லா, உமர்சாய் – ஆப்கானிஸ்தான் 272 ரன்கள் குவிப்பு, பும்ரா 4 விக்கெட்!
முதல் ஓவரில் மட்டுமே 2 ரன்கள் எடுக்கப்பட்ட நிலையில், 2ஆவது ஓவரில் 5 ரன்கள் என்று மொத்தம் 7 ரன்கள் எடுக்கப்பட்டது. அதன் பிறகு ரோகித் சர்மா பவுண்டரியும், சிக்சருமாக விளாசினார். ஒரு கட்டத்தில் 17 ரன்கள் எடுத்திருந்த போது சிக்ஸர் அடித்து 1000 ரன்களை கடந்தார். இதன் மூலமாக அதிவேகமாக 1000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் சாதனையை சமன் செய்துள்ளார். இந்தியாவிற்கு எதிரான போட்டியின் போது டேவிட் வார்னர் 19 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை கடந்தார்.
உலகக் கோப்பையில் குறைந்த இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை கடந்தவர்கள்:
19 – டேவிட் வார்னர்
19 – ரோகித் சர்மா (1109 ரன்கள்)
20 – சச்சின் டெண்டுல்கர்
20 – ஏபி டிவிலியர்ஸ்
21 – சர் விவியன் ரிச்சர்ட்ஸ்
21 – சவுரவ் கங்குலி
மேலும், இந்தப் போட்டியில் 3 சிக்ஸர்கள் அடித்ததன் மூலமாக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். இதற்கு முன்னதாக கிறிஸ் கெயில் 553 சிக்ஸர்கள் அடித்து முதலிடத்தில் இருந்தார். தற்போது ரோகித் சர்மா இந்த சாதனையை முறியடித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள்:
556 - ரோஹித் சர்மா
553 - கிறிஸ் கெய்ல்
476 - ஷாஹித் அப்ரிடி
398 - பிரெண்டன் மெக்கல்லம்
383 - மார்ட்டின் குப்டில்
மேலும், ரோகித் சர்மா இந்தப் போட்டியில் 30 பந்துகளில் 53 ரன்கள் அடித்ததன் மூலமாக ஒரு நாள் போட்டிகளில் 53ஆவது அரைசதத்தையும், உலகக் கோப்பையில் 4ஆவது அரைசதத்தையும் பதிவு செய்தார். இதனை அப்படியே சதமாகவும் மாற்றினார். அவர், 63 பந்துகளில் 100 ரன்கள் குவித்து உலகக் கோப்பையில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் 6 சதங்கள் உடன் 2ஆவது இடத்தில் உள்ளார்.
மேலும், ஒரு இந்தியராக அதிவேகமாக சதங்கள் அடித்த சாதனையையும் படைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 31 சதங்கள் அடித்துள்ளார். இதற்கு முன்னதாக ரிக்கி பாண்டிங் 30 சதங்கள் அடித்திருந்தார். விராட் கோலி 47 சதங்களும், சச்சின் டெண்டுல்கர் 49 சதங்களும் அடித்துள்ளனர்.
ரோகித் சர்மா சாதனைகளின் பட்டியல்:
உலகக் கோப்பையில் அதிவேகமாக சதங்கள்: (பந்துகளின் அடிப்படையில்)
49 – எய்டன் மார்க்ரம் (தென் ஆப்பிரிக்கா) vs இலங்கை, டெல்லி, 2023
50 – கெவின் ஓ பிரையன் (அயர்லாந்து) vs இங்கிலாந்து, பெங்களூரு, 2011
51 – கிளென் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா) vs இலங்கை, சிட்னி, 2015
52 – ஏபிடிவிலியர்ஸ் (தென் ஆப்பிரிக்கா) vs வெஸ்ட் இண்டீஸ், சிட்னி, 2015
57 – இயான் மோர்கன் (இங்கிலாந்து) vs ஆப்கானிஸ்தான், மான்செஸ்டர், 2019
63 – ரோகித் சர்மா vs ஆப்கானிஸ்தான், டெல்லி, 2023
ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிவேமாக சதம் அடித்தவர்கள் (பந்துகளின் அடிப்படையில்)
52 – விராட் கோலி vs ஆஸ்திரேலியா, ஜெய்ப்பூர், 2013
60 – விரேந்திர சேவாக் vs நியூசிலாந்து, ஹாமில்டன், 2009
61 – விராட் கோலி vs ஆஸ்திரேலியா, நாக்பூர், 2013
62 – முகமது அசாரூதீன் vs நியூசிலாந்து, பரோடா, 1988
63 – ரோகித் சர்மா vs ஆப்கானிஸ்தான், டெல்லி, 2023
உலகக் கோப்பையில் அதிக சதங்கள்:
7 – ரோகித் சர்மா
6 – சச்சின் டெண்டுல்கர்
5 – ரிக்கி பாண்டிங்
5 – குமார் சங்கக்கரா
அதிக ஒரு நாள் போட்டி சதங்கள்:
49 – சச்சின் டெண்டுகர்
47 – விராட் கோலி
31 – ரோகித் சர்மா
30 – ரிக்கி பாண்டிங்
28 – சனத் ஜெயசூர்யா
Milestones in plenty for Captain Rohit Sharma 🫡
👉Most sixes in international cricket 🙌
👉Most sixes in ODI World Cups for India 💥 | | | pic.twitter.com/FEuJI0yTsW
World cup started in 1975.
No other player has scored 7 World Cup hundreds other than Rohit Sharma.
- The Greatest ever.....!!!! pic.twitter.com/sClOLwnyzp
உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்த சவுரவ் கங்குலி சாதனையை முறியடித்துள்ளார். கங்குலி 112 ரன்கள் எடுத்திருந்தார். மேலும், கபில் தேவ் 173 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வரையில் இந்திய அணி 25.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்துள்ளது. இதில், தனது முதல் உலகக் கோப்பையின் 2ஆவது போட்டியில் விளையாடிய இஷான் கிஷான் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா 131 ரன்களில் ஆட்டமிழந்தார். விராட் கோலி 11 ரன்களுடன் விளையாடி வருகிறார்.