தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பீல்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் நடக்கும் கிரிக்கெட் உலகக் கோப்பையின் 10ஆவது லீக் போட்டி இன்று லக்னோவில் நடக்கிறது. இதில், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்து வீசுவதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியா அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கேமரூன் க்ரீனுக்குப் பதிலாக மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் அலெக்ஸ் கேரிக்குப் பதிலாக ஜோஸ் இங்கிலிஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதே போன்று தென் ஆப்பிரிக்கா அணியில், கெரால்டு கோட்ஸிக்குப் பதிலாக தப்ரைஸ் ஷாம்சி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
IND vs AFG: ரன் ரேட்டில் பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி புள்ளிப்பட்டியில் 2ஆவது இடம் பிடித்த இந்தியா!
ஆஸ்திரேலியா:
பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித், ஜோஸ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஜோஷ் ஹசல்வுட், மார்னஷ் லபுஷேன், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், டேவிட் வார்னர், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா.
தென் ஆப்பிரிக்கா:
டெம்பா பவுமா (கேப்டன்), குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), மார்கோ ஜான்சென், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மகராஜ், எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி நிகிடி, கஜிகோ ரபாடா, தப்ரைஸ் ஷம்சி, ரஸிவ் வான் டெர் டுசென்
இதுவரையில் 9 லீக் போட்டிகள் நடந்துள்ளன. இந்தப் போட்டியில் நியூசிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் நடந்த 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் 3 இடங்களை பிடித்துள்ளன. இலங்கை மற்றும் நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான் விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்து கடைசி 3 இடங்களை பிடித்துள்ளன. புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும். இந்த நிலையில், தான் இன்றைய 10 ஆவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே இந்தியாவிற்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இதே போன்று, இலங்கைக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் தான் இன்றைய போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா இன்றைய போட்டியில் மோதுகின்றன. இதுவரையில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா விளையாடிய 108 போட்டிகளில் ஆஸ்திரேலியா 50 போட்டியிலும், தென் ஆப்பிரிக்கா 54 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. மூன்று போட்டிகள் டையில் முடிந்துள்ளது. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை.
இதுவே ஒரு நாள் உலகக் கோப்பையில் இரு அணிகளும் 6 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், 3 போட்டியில் ஆஸ்திரேலியாவும், 2 போட்டியில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது. ஆஸ்திரேலியா அதிகபட்சமாக 377 ரன்கள் குவித்தது. குறைந்தபட்சமாக 153 ரன்கள் எடுத்தது. இதே போன்று தென் ஆப்பிரிக்கா அதிகபட்சமாக 325 ரன்கள் குவித்தது. குறைந்தபட்சமாக 149 ரன்கள் குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.