ஐதராபாத் - பஞ்சாப் மோதும் விறுவிறுப்பான ஆட்டம் இன்று; காணத்தவறாதீர்கள்...

 
Published : Apr 19, 2018, 11:01 AM ISTUpdated : Sep 19, 2018, 02:15 AM IST
ஐதராபாத் - பஞ்சாப் மோதும் விறுவிறுப்பான ஆட்டம் இன்று; காணத்தவறாதீர்கள்...

சுருக்கம்

Hyderabad - Punjab match today dont miss it...

ஐதராபாத் சன் ரைசர்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இடையேயான விறுவிறுப்பான ஆட்டம் இன்று இரவு மொஹாலியில் நடைபெறவுள்ளது. 

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஐதராபாத்தும், மூன்றாமிடத்தில் உள்ள பஞ்சாப் அணியும் மோதுவதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.

கேன் வில்லியம்ஸன் தலைமையிலான ஐதராபாத் அணி தான் பங்கேற்ற அனைத்து ஆட்டங்களிலும் பந்துவீச்சாளர்களின் அபார பந்துவீச்சால் வென்றுள்ளது. அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணி பேட்டிங்கில் வலுவான நிலையில் உள்ளது. 

ஐதராபாத் அணியில் புவனேஸ்வர்குமார், ரஷீத்கான், ஸ்டேன்லேக், கெளல், ஷாகிப் ஹசன், சந்தீப் சர்மா ஆகியோர் பந்து வீச்சாளர்களும், ரித்திமான் சாஹா, ஷிகர் தவான், மணிஷ்பாண்டே போன்ற பேட்ஸ்மென்களும் இடம் பெற்றுள்ளனர். 

இதுவரை பெரிய அளவிலான ஸ்கோரை ஐதராபாத் எடுக்கவில்லை. மும்பை அணிக்கு எதிராக 148 ஓட்டங்கள், ராஜஸ்தான் அணிக்கு எதிராக 127 ஓட்டங்கள் என குறைந்த ஸ்கோர்களையே பெற முடிந்தது. 

அதே நேரத்தில் சென்னை அணியை 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றதால் பஞ்சாப் அணி உற்சாகத்துடன் காணப்படுகிறது. கிறிஸ் கெயில், ராகுல், மயங்க் அகர்வால், கருண் நாயர், அஸ்வின் போன்றோர் சிறப்பான பார்மில் உள்ளனர். 

டெல்லி அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் பஞ்சாப் அணி வென்றது. பின்னர் பெங்களூரு அணியிடம் இரண்டாவது ஆட்டத்தில் தோல்வியடைந்தது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Ind Vs SA: மீண்டும் ஓபனராக களம் இறக்கப்படும் சஞ்சு சாம்சன்..? தொடரைக் கைப்பற்றும் இந்தியா..?
சேப்பாக்கம் டூ சின்னசாமி.. தென்னிந்தியாவை மறந்ததா பிசிசிஐ?.. ரசிகர்கள் எழுப்பும் முழக்கம்!