
12-வது தெற்காசிய கால்பந்து கோப்பை (சாஃப்) போட்டியில் இந்தியா குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ளது.
தெற்காசிய கால்பந்து கோப்பை (சாஃப்) வங்கதேசத்தில் நடைபெறவுள்ளது. வரும் செப்டம்பர் 4 முதல் 15-ஆம் தேதி வரை சாஃப் கோப்பை கால்பந்து போட்டி மூன்றாவது முறையாக வங்கதேசத்தில் நடக்கிறது.
குரூப் ஏ பிரிவில் வங்கதேசம், நேபாளம், பாகிஸ்தான், பூடான் நாடுகளும், குரூப் பி பிரிவில் இந்தியா, மாலத்தீவு, இலங்கை உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
ஏழு முறை சாம்பியனான இந்தியா கடந்த 2015-ல் நடந்த இறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தானை வென்று கோப்பையை கைப்பற்றியது.
டாக்காவில் உள்ள நேஷனல் விளையாட்டரங்கில் அனைத்துப் போட்டிகளும் நடக்கின்றன.
தற்போது 12-வது சாஃப் கால்பந்து கோப்பை போட்டிகள் நடத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.