எனது முக்கிய நோக்கமே 90 மீ தூரம் ஈட்டி எறிவதுதான் - காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா...

First Published Apr 19, 2018, 10:52 AM IST
Highlights
My main purpose is to throw 90 meters away - Gold winner Neeraj Chopra who won the Commonwealth Games ...


எனது முக்கிய நோக்கம் 90 மீ தூரம் ஈட்டி எறிவதாகும். அப்போது தான் ஒலிம்பிக் பதக்கத்தை வெல்ல முடியும் என்று காமன்வெல்த் போட்டி ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

அரியாணா மாநிலத்தைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா (20) உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றதின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். 

ஜெர்மனியில் பயிற்சி பெறும் நீரஜ் சோப்ரா கோல்ட்கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் தடகளத்தில் 86.47 மீ தூரம் ஈட்டி எறிந்து தங்கம் வென்ற ஓரே வீரர் ஆவார்.

இந்த நிலையில் நேற்று புதுடெல்லி திரும்பிய சோப்ராவுக்கு இந்திய இராணுவம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

அப்போது அவர் செய்தியாளர்களிடம், "ஜெர்மனியில் மூன்று மாதங்களாக பயிற்சியாளர் வெர்னர் டேனியல்ஸிடம் பயிற்சி பெற்றேன். அங்கே நானே பயிற்சி எடுத்துக் கொண்டு, சுயமாக சமைத்து சாப்பிட்டேன். 

தங்கம் வெல்வதற்காக கடினமாக பயிற்சி பெற நேரிட்டது. எனது முக்கிய நோக்கம் 90 மீ தூரம் ஈட்டி எறிவதாகும். சர்வதேச அளவிலான இலக்கு அதுவாகும். அதை அடைந்தால் உலகளாவிய போட்டிகளில் பதக்கம் வெல்லலாம்.

அடுத்து வரும் ஆசிய விளையாட்டு, ஒலிம்பிக்ஸ் போன்றவற்றில் தீவிர கவனம் செலுத்துவேன். டயமண்ட் லீக் போட்டிகளிலும் பங்கேற்க உள்ளேன். 

பாட்டியாலாவில் பயிற்சி பெற உள்ளேன். ஆசிய அளவில் கத்தார், சீன தைபே, உள்ளிட்ட சில நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் ஈட்டி எறிதலில் சவாலாக இருப்பர்" என்று அவர் தெரிவித்தார். 
 

tags
click me!