
ஐபிஎல் 11வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இரண்டு ஆண்டுகால தடைக்கு பிறகு களமிறங்கியுள்ள சென்னை அணி மிரட்டலாக ஆடிவருகிறது. 14 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் இரண்டாமிடத்தில் உள்ளது. சென்னை அணியின் கேப்டன் தோனியும் அபாரமாக ஆடிவருகிறார். நல்ல ஃபார்மில் இருக்கும் தோனி, அனைத்து பவுலர்களின் பந்துகளையும் பறக்கவிடுகிறார்.
சென்னை அணி வெற்றிகளை குவிப்பதற்கு நிகராக சென்னை ரசிகர்கள், தோனியின் ஆட்டத்தையும் கொண்டாடிவருகின்றனர். பொதுவாக மிகவும் பின் வரிசையில் களமிறங்கும் தோனி, இந்த தொடரில் 4 அல்லது 5வது வரிசையில் களமிறங்கி அசத்தலாக ஆடிவருகிறார்.
10 போட்டிகளில் ஆடியுள்ள தோனி, 3 அரைசதங்களுடன் 360 ரன்களை குவித்துள்ளார். இதுவரை அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில், 7வது இடத்தில் இருக்கிறார் தோனி. இந்த தொடரில் தோனி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்த ஐபிஎல் சீசனில் இதுவரை அதிக சிக்ஸர் அடித்த வீரரும் தோனி தான். 10 போட்டிகளில் 27 சிக்ஸர்கள் விளாசி முதலிடத்தில் உள்ளார். தோனிக்கு அடுத்த இடங்களில் தான் கெய்ல், டிவில்லியர்ஸ் ஆகியோர் உள்ளனர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.