24 விளையாட்டு வீரர்களை அனுப்பி 4 பதக்கங்களை வென்ற ஹரியானா , 13 வீரர்களை கொண்ட தமிழ்நாட்டிற்கு ஒன்று கூட இல்ல!

By Rsiva kumarFirst Published Aug 13, 2024, 2:50 PM IST
Highlights

பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் இந்தியா ஒரு வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கங்கள் வென்று மொத்தம் 6 பதக்கங்களுடன் 71ஆவது இடத்தைப் பிடித்தது. ஹரியானா 24 விளையாட்டு வீரர்களை அனுப்பி 4 பதக்கங்களை வென்று முதலிடம் பிடித்தது.

பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியா சார்பில் 117 விளையாட்டு வீரர்கள் போட்டியிட்டனர். இதில், வில்வித்தை, தடகளம், துப்பாக்கி சுடுதல், கோல்ஃப், பேட்மிண்டன், டென்னிஸ், மல்யுத்தம், குத்துச்சண்டை, பளுதூக்குதல், ஜூடோ, படகு போட்டி என்று 16 வகையான விளையாட்டுகளில் இந்தியா பங்கேற்றது. இதில், துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்தார்.

ரியல் மாட்ரிட்டில் எம்பாப்பே சம்பளம் எவ்வளவு?

Latest Videos

இதே போன்று கலப்பு இரட்டையர் பிரிவு 10மீ ஏர் பிஸ்டல் பிரிவிலும் மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்தார். மேலும், துப்பாக்கி சுடுதல் போட்டியில் 50மீ ஏர் ரைபிள் 3பி பிரிவில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசலே வெண்கலப் பதக்கம் வென்றார். ஹாக்கி இந்தியா அணியும் இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்தது. கடைசியாக மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் அமன் செராவத் இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்தார்.

இதன் மூலமாக பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரை இந்தியா ஒரு வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கம் என்று மொத்தமாக 6 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் இந்தியா 71ஆவது இடத்தில் உள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கம் என்று மொத்தமாக 7 பதக்கங்களை வென்றது.

மனு பாக்கர் - நீரஜ் சோப்ரா திருமணம்? மனு பாக்கர் தந்தை விளக்கம்!

பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் விளையாட்டின் அடிப்படையில் இந்தியா வென்ற பதக்கங்களின் பட்டியல்:

தடகளம் – 1 வெள்ளி

ஹாக்கி – 1 வெண்கலம்

துப்பாக்கி சுடுதல் – 3 வெண்கலம்

மல்யுத்தம் – 1 வெண்கலம்

இந்தியா பங்கேற்ற 16 விளையாட்டுகளில் 4 விளையாட்டுகளில் மட்டுமே இந்தியா பதக்கம் வென்றுள்ளது. இந்த தொடரில் 6 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் 4ஆவது இடம் பிடித்து பதக்கத்தை தவறவிட்டனர்.

தீர்ப்பு வருவதற்கு முன்னதாகவே ஒலிம்பிக் கிராமத்திலிருந்து நாட்டிற்கு புறப்பட்ட வினேஷ் போகத் - நாளை தீர்ப்பு!

4ஆவது இடம் பிடித்த இந்திய வீரர்கள்:

அர்ஜூன் பபுதா: ஆண்களுக்கான 10மீ ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல்

தீரஜ் பொம்மதேவரா மற்றும் அங்கீதா பகத் – கலப்பு இரட்டையர் வில்வித்தை

மனு பாக்கர் – மகளிருக்கான 25மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல்

மீராபாய் சானு – மகளிருக்கான 49கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல்

லக்‌ஷயா சென் – பேட்மிண்டன் வெண்கலப் பதக்க போட்டி

மகேஸ்வரி சவுகான் மற்றும் ஆனந்த் ஜீத் சிங் நரூகா – கலப்பு இரட்டையர் ஸ்கீட் துப்பாக்கி சுடுதல், வெண்கலப் பதக்க போட்டி

தங்கம் ஜெயிச்ச பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமுக்கும் குவியும் கார்கள் – வாழ்நாள் முழுவதும் பெட்ரோல்/டீசல் இலவசம்

மாநிலம் வாரியாக பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு சென்ற விளையாட்டு வீரர்கள்:

மாநிலம் வாரியாக பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு சென்ற இந்திய விளையாட்டு வீரர்களில் ஹரியானா முதலிடம் பிடித்துள்ளது. 24 விளையாட்டு வீரர்களை பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு அனுப்பி வைத்து 4 பதக்கங்களை வென்றுள்ளது. 2ஆவது வரிசையில் 19 வீரர்களுடன் பஞ்சாப்பும், தமிழ்நாடு 13 வீரர்களுடன் 3ஆவது வரிசையிலும் உள்ளது. மகாராஷ்டிரா 5 வீரர்களுடன் 5ஆவது இடத்தில் இருந்தாலும் ஒரு பதக்கம் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்தமாக பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் இந்தியாவிற்காக 6 பதக்கங்களில் 4 பதக்கங்களை ஹரியானா வென்றுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2.09 சதவிகிதம் மக்கள் தொகையை கொண்ட ஹரியானா, பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் இந்தியா வென்ற பதக்கங்களில் 66.66 சதவிகிதம் பங்களித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!