குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிராக சென்னையில் நடந்த 44ஆவது போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியானது தோல்வி அடைந்துள்ளது.
புரோ கபடி லீக் தொடரின் 10ஆவது சீசன் கடந்த 10 ஆம் தேதி அகமதாபாத்தில் தொடங்கியது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு காளைகள், தபாங் டெல்லி, குஜராத் ஜெயிண்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்தான், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா, யுபி யோதாஸ் என்று 12 அணிகள் இடம் பெற்றுள்ளன.
டீன் எல்கரின் பொறுப்பான பேட்டிங்கால் 2ஆம் நாளில் தென் ஆப்பிரிக்கா 256 ரன்கள் குவிப்பு!
அகமதாபாத், பெங்களூரு, புனே ஆகிய பகுதிகளில் போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில் தற்போது சென்னையில் நடந்தது. இங்கு மட்டும் 6 நாட்கள் போட்டிகள் நடத்தப்படுகிறது. கடந்த 22ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டி நேற்று வரை நடந்தது. அடுத்ததாக நொய்டா, மும்பை, ஜெய்பூர், ஹைதராபாத், பாட்னா, டெல்லி, கொல்கத்தா, பஞ்ச்குலா ஆகிய பகுதிகளில் போட்டி நடக்கிறது.
இதுவரையில் தமிழ் தலைவாஸ் விளையாடிய 7 போட்டிகளில் 2ல் மட்டுமே வெற்றி பெற்று 5 தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 11ஆவது இடம் பிடித்திருந்தது. இதில் 2 தோல்வி சென்னையில் நடந்த ஹோம் மைதான போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று சென்னையில் நடந்த கடைசி போட்டியிலும் தமிழ் தலைவாஸ் அணியானது தோல்வி அடைந்துள்ளது.
நேற்று சென்னையில் கடைசி போட்டியாக நடந்த 44ஆவது போட்டியில் தமிழ் தலைவாஸ் மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதின. இதில், தொடக்க முதலே ஆதிக்கம் செலுத்திய குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி ரைய்டு, டிஃபெண்டர் என்று ஒவ்வொன்றிலும் புள்ளி எடுத்து வந்தது. ஆனால், தமிழ் தலைவாஸ் அணி சென்ற ரைய்டுகளில் தோல்வியோடு திரும்பியது. இறுதியாக குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியானது 33 புள்ளிகள் பெறவே தமிழ் தலைவாஸ் 30 புள்ளிகள் மட்டுமே பெற்று 3 புள்ளிகளில் தோல்வி அடைந்துள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இதன் மூலமாக சென்னையில் விளையாடிய 4 போட்டியிலும் தமிழ் தலைவாஸ் அணியானது தோல்வி அடைந்துள்ளது. இதுவரையில் 8 போட்டிகளில் தமிழ் தலைவாஸ் விளையாடிய நிலையில், 2ல் மட்டுமே வெற்றி பெற்று 6 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 11ஆவது இடத்தில் உள்ளது. குஜராத் ஜெயிண்ட்ஸ் விளையாடிய 8 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடம் பிடித்துள்ளது.
டிசம்பர் 22 – மேட்ச் 34: தமிழ் தலைவாஸ் 33 – பாட்னா பைரேட்ஸ் 46 – தோல்வி
டிசம்பர் 23 – மேட்ச் 36: தமிழ் தலைவாஸ் 24 – ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் 25 – தோல்வி
டிசம்பர் 25: மேட்ச் 41: தமிழ் தலைவாஸ் 29 – ஹரியானா ஸ்டீலர்ஸ் 42 – தோல்வி
டிசம்பர் 28: மேட்ச் 44: தமிழ் தலைவாஸ் 30 – குஜராத் ஜெயிண்ட்ஸ் 33 - தோல்வி
Our Charming young Prince watching match vs
along with dir
Queitly preparing for 🔥🔥 pic.twitter.com/m7DZ0UvDyN
Cute look..😻
..💥⚡ pic.twitter.com/z8EyIHU37D