பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கிய கௌன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்மிருதி மந்தனாவிடம் எந்த மாதிரியான பசங்கள் பிடிக்கும் என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்த ஸ்மிருதி மந்தனா கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் இந்திய மகளிர் அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 325 ரன்களும், 77 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3073 ரன்களும், 118 டி20 போட்டிகளில் விளையாடி 2853 ரன்களும் எடுத்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டிகளில் இந்திய மகளிர் அணி வெற்றி வாகை சூடியது.
இந்திய மகளிர் அணி தவிர மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். இந்த நிலையில் தான் தனியார் சேனல் ஒன்றில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கும் கௌன் பனேகா குரோர்பதி என்ற நிகழ்ச்சியில், இந்திய அணியின் விக்கெட் கீப்பரான இஷான் கிஷான் உடன் இணைந்து கலந்து கொண்டார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் கவுன்சிலுக்கு பணம் திரட்டுவதற்காக இந்த நிகழ்ச்சியில் இருவரும் பங்கேற்றதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் போது ஸ்மிருதி மந்தனாவிடம் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். உங்களுக்கு சமூக வலைதளங்களில் அதிளவில் பாலோயர்ஸ் இருக்கிறார்கள். இன்ஸ்கிராம் பக்கத்தில் அதிக ஆண் ரசிகர்கள் இருக்கிறார்கள். உங்களுக்கு எந்த மாதிரியான பசங்கள பிடிக்கும் என்று கேட்டார்.
இதற்கு அமிதாப் பச்சன் அந்த ரசிகரை பார்த்து, உங்களுக்கு திருமணம் ஆகி விட்டதா என்று கேட்டார். அதற்கு அந்த ரசிகர் இன்னும் ஆகவில்லை. அதனால் தான் நான் இந்த கேள்வியை ஸ்மிருதி மந்தனாவிடம் கேட்கிறேன் என்றார். இதில் வெட்கத்தில் சிரித்த ஸ்மிருதி மந்தனா, இந்த கேள்வியை நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.
ஒன் மேன் ஆர்மியாக கடைசி வரை போராடிய கேஎல் ராகுல் – டீசண்டாக 245 ரன்கள் எடுத்த டீம் இந்தியா!
அவர் ஒரு நல்ல பையனாக இருக்க வேண்டும். நான் விளையாடும் விளையாட்டை புரிந்து கொள்பவராக இருக்க வேண்டும். நான் விரும்பும் 2 குணங்கள் இவை தான். கிரிக்கெட் விளையாடும் ஒரு பெண்ணாக என்னால், என் கணவருடன் அதிக நேரம் செலவழிக்க முடியாது. அதனை புரிந்து கொண்டு என்னை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று ஸ்மிருதி மந்தனா பதிலளித்தார்.
Bolo na k phool jaisa ladka mil gaya hai!
pic.twitter.com/L7vUyqDazJ