அந்த ஒரு விஷயத்துக்காக கோலியை பாராட்டி தள்ளிய தாதா!!

By karthikeyan VFirst Published Jan 20, 2019, 4:15 PM IST
Highlights

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை முன்னாள் கேப்டன் கங்குலி வெகுவாக பாராட்டியுள்ளார்.
 

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை முன்னாள் கேப்டன் கங்குலி வெகுவாக பாராட்டியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை வென்று இந்திய அணி சாதனை படைத்தது. உலக கோப்பை நெருங்கிய நிலையில், இந்திய அணி பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே வலுவாக உள்ளது. தோனி மீண்டும் ஃபார்முக்கு திரும்பியிருப்பது கூடுதல் பலம். கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே ஃபார்மில் இல்லாமல் தவித்து வந்த தோனி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளிலுமே அரைசதம் அடித்து தொடர் நாயகன் விருதை வென்று அசத்தினார். தோனியின் நடப்பு ஃபார்மால் இந்திய அணி உற்சாகமடைந்துள்ளது.

ஓராண்டுக்கும் மேலாக ஃபார்மில் இல்லாமல் தொடர்ந்து சொதப்பிவந்தார் தோனி. அதனால் உலக கோப்பை அணியில் அவர் ஆடக்கூடாது என்ற குரல்கள் வலுத்தன. தோனிக்கு மாற்று வீரரை தேர்வு செய்ய வேண்டும் என்று பல குரல்கள் எழுந்தன. எனினும் தோனியின் அனுபவ ஆலோசனை, விக்கெட் கீப்பிங் திறமை ஆகியவற்றின் காரணமாக உலக கோப்பையில் அவர் ஆடுவது பல முறை அணி நிர்வாகத்தாலும் கேப்டன் கோலியாலும் உறுதி செய்யப்பட்டது.

ஒருவழியாக ஃபார்முக்கு வந்த தோனி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அருமையாக ஆடினார். இந்நிலையில், தோனி விஷயத்தில் பொறுமை காத்த கேப்டன் கோலியை முன்னாள் கேப்டன் கங்குலி பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த கங்குலி, தோனியும் கோலியும் தோனியும் இந்திய அணிக்காக நிறைய போட்டிகளை ஆடியுள்ளனர். தற்போதைய அணியில் தோனி தான் சீனியர் வீரர்.தோனி விஷயத்தில் கேப்டன் கோலி பொறுமை காத்தார். இந்த விஷயத்தில் தோனிக்கும் கோலிக்கும் இடையேயான உறவுதான் முக்கியமான விஷயம். அணியின் சீனியர் வீரர்களுக்கு இடையே, அதுவும் முன்னாள் மற்றும் இந்நாள் கேப்டன்களுக்கு இடையேயான இந்த ஆரோக்கியமான உறவு அணிக்கு நல்லது. கடந்த ஒன்றரை ஆண்டாக தோனி சரியாக ஆடாதபோதும் எவ்வளவோ நெருக்கடிக்கு இடையிலும் தோனியை கைவிட்டுவிடாமல் அவர் விஷயத்தில் பொறுமை காத்த கோலிக்கு கங்குலி பாராட்டு தெரிவித்தார்.
 

click me!