விராட் கோலி படைக்கு சவால் விடும் நியூசிலாந்து முன்னாள் வீரர்

By karthikeyan VFirst Published Jan 20, 2019, 2:28 PM IST
Highlights

உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், இந்திய அணி வலுவாக உள்ளது. பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே சிறந்து விளங்குகிறது. ஓராண்டுக்கும் மேலாக ஃபார்மில் இல்லாமல் தவித்துவந்த தோனி மீண்டும் ஃபார்முக்கு வந்திருப்பது இந்திய அணிக்கு கூடுதல் பலம். 
 

ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை வென்று, அங்கிருந்து நேரடியாக நியூசிலாந்தில் அந்த அணியை எதிர்கொள்ள உள்ள நிலையில், கோலி தலைமையிலான இந்திய அணிக்கு நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் சவால் விடுத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி, டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை வென்று சாதனை படைத்தது. ஆஸ்திரேலியாவில் எந்த தொடரையும் இழக்காத ஒரே அணி என்ற பெருமையுடன் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்கிறது இந்திய அணி. 

உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், இந்திய அணி வலுவாக உள்ளது. பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே சிறந்து விளங்குகிறது. ஓராண்டுக்கும் மேலாக ஃபார்மில் இல்லாமல் தவித்துவந்த தோனி மீண்டும் ஃபார்முக்கு வந்திருப்பது இந்திய அணிக்கு கூடுதல் பலம். 

கோலி தலைமையிலான இந்திய அணி வலுவாக உள்ள அதேவேளையில், ஆஸ்திரேலிய அணியை போல அல்லாமல், சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான கேன் வில்லியம்சனின் தலைமையில் நியூசிலாந்து அணியும் வலுவாக உள்ளது. கோலி தலைமையிலான இந்திய அணியும் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதும் தொடர் சவாலானதாகவே இருக்கும். 

இந்நிலையில், இந்திய அணியின் சுற்றுப்பயணம் குறித்து டுவீட் செய்துள்ள நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டைரிஸ், ஆஸ்திரேலியாவில் தொடரை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, அதே மாதிரியான ஆட்டத்தை நியூசிலாந்தில் ஆடுமாறு சவால் விடுத்துள்ளார்.

ஸ்காட் ஸ்டைரிஸ் நியூசிலாந்து அணிக்காக 188 ஒருநாள் போட்டிகள் மற்றும் 29 டெஸ்ட் போட்டிகளில் ஆடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!