ஆஸ்திரேலிய அணிக்கு புதிய கேப்டன்..? ஆல்ரவுண்டரை பரிந்துரைக்கும் முன்னாள் வீரர்

By karthikeyan VFirst Published Jan 20, 2019, 1:54 PM IST
Highlights

5 முறை உலக கோப்பையை வென்று, உலக கோப்பையின் வெற்றிகரமான அணியாக திகழும் ஆஸ்திரேலிய அணியின் நிலை இந்த முறை பரிதாபமாக உள்ளது. உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், அந்த அணி தொடர் தோல்விகளால் துவண்டு போயுள்ளது. 

ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாமல் தவித்துவரும் ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியிடம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை இழந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் ஒரு தொடரை கூட தோற்காத அணி என்ற பெருமையை கோலி தலைமையிலான இந்திய அணி பெற்றுள்ளது. டி20 தொடர் சமனடைந்த நிலையில், டெஸ்ட் தொடரை 2-1 என வென்ற இந்திய அணி, ஒருநாள் தொடரையும் 2-1 என வென்றது.

ஸ்மித் மற்றும் வார்னரின் தடைக்கு பிறகு ஃபின்ச்சின் தலைமையில் ஆஸ்திரேலிய அணி ஒருநாள் போட்டிகளில் ஆடிவருகிறது. இந்திய அணியிடம் வாங்கிய அடி அந்த அணிக்கு விழுந்த மிகப்பெரிய அடி. ஃபின்ச்சின் தலைமையில் அனுபவமற்ற வீரர்களுடன் திணறிவருகிறது. 

5 முறை உலக கோப்பையை வென்று, உலக கோப்பையின் வெற்றிகரமான அணியாக திகழும் ஆஸ்திரேலிய அணியின் நிலை இந்த முறை பரிதாபமாக உள்ளது. உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், அந்த அணி தொடர் தோல்விகளால் துவண்டு போயுள்ளது. நம்பிக்கையிழந்து இருக்கிறது ஆஸ்திரேலிய அணி. அந்த அணி இழந்த நம்பிக்கையை பெற்று உத்வேகத்துடன் செயல்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. 

ஸ்மித் மற்றும் வார்னரின் தடை முடியவுள்ள நிலையில், அவர்கள் இருவரையும் எதிர்நோக்கியிருக்கும் ஆஸ்திரேலிய அணிக்கு புதிய கேப்டன் தேவை எனவும் யாரை கேப்டனாக்கலாம் எனவும் முன்னாள் வீரர் மிட்செல் ஜான்சன் கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மிட்செல் ஜான்சன், கிளென் மேக்ஸ்வெல்லை கேப்டனாக நியமிக்கலாம். பிக்பேஷ் லீக் தொடரில் மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணியின் கேப்டனாக அவர் செயல்படுவதை பார்த்திருக்கிறோம். கேப்டன் பொறுப்பு அவரை பக்குவப்படுத்தி, அவரிடமிருந்து மேலும் சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வர உதவும்.

மேக்ஸ்வெல்லுடன் நான் ஆடியிருக்கிறேன். ஆஸ்திரேலிய அணியிலும் ஐபிஎல்லிலும் அவருடன் நான் ஆடியதன் மூலம் நிறைய நேரம் அவருடன் இருந்திருக்கிறேன். மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் ஆடியபோது, அணி கூட்டத்தில் ஒன்றாக கலந்துகொண்டுள்ளோம். அப்போதெல்லாம், பல நல்ல ஐடியாக்களை மேக்ஸ்வெல் வழங்குவார். ஃபீல்டிங் செட்டப், எந்த வீரர்களை எங்கு ஃபீல்டிங் நிறுத்துவது என்பன போன்ற விஷயங்களில் தெளிவான ஆலோசனைகளை வழங்குவார். அதுமட்டுமல்லாமல் எதிரணி வீரர்களை பற்றி நன்கு அறிந்துகொள்வார் மேக்ஸ்வெல்.எதிரணி வீரர்களை பற்றி நன்கு தெரிந்த மேக்ஸ்வெல்லால் அவர்களுக்கு எதிரான சிறந்த திட்டங்களை வகுத்து செயல்படுத்த முடியும். அதேபோல் போட்டியின் போக்கை நன்கு அறிந்துகொண்டு அதற்கேற்றபடி செயல்படக்கூடியவர் மேக்ஸ்வெல். எனவே மேக்ஸ்வெல்லை கேப்டனாக்குவது அணிக்கு உத்வேகமாக அமையும் என்று மிட்செல் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
 

click me!