நீரஜ் சோப்ரா முதல் மீராபாய் சானு வரையில் இந்தியாவிற்காக பதக்கம் வென்று கொடுத்தவர்கள் யார் யார் தெரியுமா?

By Rsiva kumarFirst Published Jul 20, 2024, 3:00 PM IST
Highlights

இன்னும் 6 நாட்களில் பாரீஸில் 2024 கோடைகால ஒலிம்பிக் தொடர் தொடங்க உள்ள நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா 7 பதக்கங்களை கைப்பற்றிய நிலையில் இந்த ஆண்டு பதக்கங்களின் எண்ணிக்கை அதிகரிக்கு என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரானது வரும் 26 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரையில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இந்த தொடரில் மொத்தமாக 32 விளையாட்டுகள் இடம் பெற்றுள்ளன. இதில் 329 நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இந்த தொடரில் கிட்டத்தட்ட 10,714 விளையாட்டு வீரர்கள் இடம் பெற்றுள்ளன. இந்தியா சார்பி மட்டும் 16 விளையாட்டுகளில் 117 விளையாட்டு வீரர்கள் இடம் பெற்று விளையாடுகின்றனர். இதில் அனைவரது பார்வையும் நீரஜ் சோப்ரா, பிவி சிந்து, மீராபாய் சானு, அனுஷ் அகர்வாலா, தீபிகா குமாரி, அங்கிதா பகத், சூரஜ் பன்வர், பிரியங்கா கோஸ்வாமி ஆகியோர் உள்படர் பலர் மீது விழுகிறது. இவர்கள் இந்திய நாட்டிற்காக பதக்கம் வென்று கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் மகளிர் அணியை கதறவிட்ட ஷஃபாலி வர்மா – ஸ்மிருதி மந்தனா - இந்திய மகளிர் அணி எளிய வெற்றி!

Latest Videos

கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் இந்தியா சார்பில் 18 விளையாட்டுகளுக்கு 122 விளையாட்டு வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். ஆனால், நீரஜ் சோப்ரா மட்டுமே ஈட்டி எறிதலில் இந்திய நாட்டிற்காக தங்கப் பதக்கம் கைப்பற்றி கொடுத்தார். பளுதூக்குதலில் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்று கொடுத்தார். மல்யுத்த போட்டியில் ரவி குமார் தஹியா வெள்ளி வென்றார். ஆனால், பிவி சிந்து பேட்மிண்டனில் வெண்கலம் மட்டுமே கைப்பற்றினார். இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்தது. மல்யுத்த போட்டியில் பஜ்ரங் புனியா வெணகலம் வென்றார்.

பாண்டியாவின் 170 கோடி சொத்துக்களை எழுதி வாங்கிட்டு தான் நடாஷா சென்றாரா?

இதுவரையில் இந்தியா ஒலிம்பிக் தொடரில் பங்கேற்று 35 பதக்கங்களை மட்டுமே வென்றுள்ளது. முதல் முதலாக 1900 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் இந்தியா பங்கேற்றது. இதில் ஒரே ஒரு வீரர் மட்டுமே இந்தியா சார்பில் பங்கேற்றார். அதுவும், தடகள வீரர். நார்மன் பிரிட்சார்ட் என்ற தடகள வீரர் தான் இந்தியா சார்பில் பங்கேற்று இந்தியாவிற்கு 2 வெள்ளிப் பதக்கங்களை வென்று கொடுத்தார். அதோடு, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் ஆசிய நாடு என்ற பெருமையையும் இந்தியா அப்போது பெற்றது.

தொடர்ந்து புறக்கணிக்கப்படும் சிஎஸ்கே கேப்டன் கெய்க்வாட் – We Want Rutu Back களமிறங்கிய ரசிகர்கள்!

இதையடுத்து 2004 ஆம் ஆண்டு ஏதன்ஸ் ஒலிம்பிக் தொடரில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்திய வீரர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் வெள்ளிப் பதக்கம் வென்றார். 2012 ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் தொடரில் விஜய் குமார் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 25 மீ ரேபிட் பிஸ்டல் பிரிவில் விஜய் குமார் வெள்ளி பதக்கம் வென்றார். 2016 ரியோ ஒலிம்பிக் தொடரில் பேட்மிண்டன் பிரிவில் இந்திய வீராங்கனை பிவி சிந்து வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் மல்யுத்த பிரிவில் விஜய் குமார் ஹாஹியா வெள்ளி பதக்கம் கைப்பற்றினார்.

click me!