- Home
- Gallery
- தொடர்ந்து புறக்கணிக்கப்படும் சிஎஸ்கே கேப்டன் கெய்க்வாட் – We Want Rutu Back களமிறங்கிய ரசிகர்கள்!
தொடர்ந்து புறக்கணிக்கப்படும் சிஎஸ்கே கேப்டன் கெய்க்வாட் – We Want Rutu Back களமிறங்கிய ரசிகர்கள்!
இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட் இடம் பெறாதது குறித்து தொடர்ந்து விமர்சனம் எழுந்து வரும் நிலையில் அவருக்கு ஆதரவாக ரசிகர்கள் களமிறங்கியுள்ளனர்.

Ruturaj Gaikwad
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரில் கடைசி நேரத்தில் கேப்டன் பொறுப்பு ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு வழங்கப்பட்டது. கேப்டன் பொறுப்பு மட்டுமே ருதுராஜ் கெய்க்வாட்டிடம் இருந்தது. ஆனால், களத்தில் பீல்டர் செட் பண்ணுவது முதல் பவுலர்களை கொண்டு வருவது வரையில் எல்லா வேலைகளையும் தோனியே செய்து வந்தார்.
Ruturaj Gaikwad
தோனியின் ஒவ்வொரு அசைவிற்கு ஏற்ப ருதுராஜ் கெய்க்வாட் செயல்பட்டார். இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய 14 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றியும், 7 போட்டிகளில் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடம் பிடித்து கடைசி அணியாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து வெளியேறியது.
We Want Rutu Back
இந்த தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் விளையாடிய 14 போட்டிகளில் 4 அரைசதம், ஒரு சதம் உள்பட 583 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் 2ஆவது இடம் பிடித்தார். ஆனால், அதன் பிறகு இந்திய அணி டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்றது. இதற்கான இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட் இடம் பெறவில்லை.
Ruturaj Gaikwad
டி20 உலகக் கோப்பை தொடரைத் தொடர்ந்து ஜிம்பாப்வே சென்ற இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில், ருதுராஜ் கெய்க்வாட் இடம் பெற்று விளையாடினார். 4 போட்டிகளில் 3 இன்னிங்ஸ் விளையாடி 7, 77*, 9 ரன்கள் என்று மொத்தமாக 83 ரன்கள் எடுத்தார்.
Ruturaj Gaikwad
கடைசி டி20 போட்டியில் இடம் பெறவில்லை. ஜிம்பாப்வே தொடரைத் தொடர்ந்து இந்திய அணியானது இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.
IND vs SL ODI Series
இந்த தொடர் வரும் ஜூலை 27 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில், ருதுராஜ் கெய்க்வாட் இடம் பெறவில்லை. ஆனால், ஐபிஎல் தொடரில் சரவர விளையாடாத சுப்மன் கில் ஜிம்பாப்வே தொடரில் கேப்டனாக செயல்பட்டு தொடரை கைப்பற்றி கொடுத்தார். டி20 உலகக் கோப்பை தொடரில் இடம் பெறாத போதிலும் அவர் அணியில் இடம் பெற்றிருந்தார்.
IND vs SL T20I
தற்போது இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அப்படியிருக்கும் போது ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று முன்னாள் சீனியர் வீரர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள் என்று பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
India Tour of Sri Lanka 2024
கடந்த ஆண்டு ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய அணி கலந்து கொண்டு தங்கப் பதக்கம் கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
Ruturaj Gaikwad
இந்த நிலையில் தான் இலங்கை தொடருக்கான இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட் இடம் பெறாத நிலையில் We Want Rutu Back என்ற ஹேஷ்டேக் மூலமாக ரசிகர்கள் கெய்க்வாட்டிற்கு ஆதரவாக களமிறங்கியுள்ளனர். இலங்கை தொடருக்கு இன்னும் 7 நாட்கள் இருக்கும் நிலையில் கெய்க்வாட் அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
India Tour of Sri Lanka 2024
டி20 தொடருக்கான இந்திய அணி:
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ரியான் பராக், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது, முகமது சிராஜ்
India vs Sri Lanka
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், ஷிவம் துபே, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், அக்ஷர் படேல், கலீல் அகமது, ஹர்ஷித் ராணா.
IND ODI Squad vs Sri Lanka
IND vs SL T20I Series:
ஜூலை 26: இலங்கை – இந்தியா முதல் டி20 போட்டி, இரவு 7 மணி, பல்லேகலே
ஜூலை 28: இலங்கை – இந்தியா 2ஆவது டி20 போட்டி, இரவு 7 மணி, பல்லேகலே
ஜூலை 30: இலங்கை – இந்தியா 3ஆவது டி20 போட்டி, இரவு 7 மணி, பல்லேகலே
Ruturaj Gaikwad
IND vs SL ODI Series:
ஆகஸ்ட் 02: இலங்கை – இந்தியா முதல் ஒருநாள் போட்டி, பிற்பகல் 2.30 மணி, கொழும்பு
ஆகஸ்ட் 04: இலங்கை – இந்தியா 2ஆவது ஒருநாள் போட்டி, பிற்பகல் 2.30 மணி, கொழும்பு
ஆகஸ்ட் 07: இலங்கை – இந்தியா 3ஆவது ஒருநாள் போட்டி, பிற்பகல் 2.30 மணி, கொழும்பு