பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: ருமேனியா - ஸ்பெயின் வீராங்கனைகள் நேருக்கு நேர் மோதல்...

 
Published : Jun 07, 2018, 11:49 AM ISTUpdated : Sep 19, 2018, 02:29 AM IST
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: ருமேனியா - ஸ்பெயின் வீராங்கனைகள் நேருக்கு நேர் மோதல்...

சுருக்கம்

French Open tennis Romania - Spanish face-to-face confrontation

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதியில் ருமேனியாவின் சிமோனா ஹேலப் - ஸ்பெயினின் கார்பின் முகுருஸா ஆகியோர் மோதவுள்ளனர்.

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் காலிறுதி ஒன்றில் உலகின் முதல் நிலை வீராங்கனையான சிமோனா ஹேலப், போட்டித் தரவரிசையில் 12-வது இடத்தில் இருந்த ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பருடன் மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் முடிவில் சிமோனா 6-7(2/7), 6-3, 6-2 என்ற செட்களில் வெற்றி பெற்றார். 

இதையடுத்து பிரெஞ்ச் ஓபன் அரையிறுதிக்கு 3-வது முறையாக தகுதிபெற்றார் சிமோனா.

மற்றொரு காலிறுதியில் உலகின் 3-ஆம் நிலை வீராங்கனையான கார்பின் முகுருஸா, போட்டித் தரவரிசையில் 28-வது இடத்தில் இருந்த ரஷியாவின் மரியா ஷரபோவாவை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் முகுருஸா 6-2, 6-1 என்ற கணக்கில் எளிதாக ஷரபோவாவை வீழ்த்தினார்.  இதனையடுத்து அரையிறுதிக்கு முகுருஸா முன்னேறினார்.

இதையடுத்து அரையிறுதி ஆட்டம் ஒன்றில் சிமோனா ஹேலப் - கார்பின் முகுருஸா மோதவுள்ளனர். 

இந்த ஆட்டத்தின் வெற்றியின் அடிப்படையிலேயே அடுத்த வாரம் வெளியாக உள்ள உலகின் முதல் நிலைக்கான இடம் நிர்ணயிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ஹர்திக் மரண அடி.. பும்ரா மேஜிக் பவுலிங்.. SA-வை கதறவிட்ட இந்தியா.. T20 தொடரை வென்று அசத்தல்!
அபிஷேக் சர்மா சாதனையை சல்லி சல்லியாக நொறுக்கிய ஹர்திக் பாண்ட்யா..! மின்னல் வேக அரை சதம்!