கோடிகளில் புரளும் கோலி!! டாப் 100ல் ஒரே இந்திய வீரர் விராட் தான்

 
Published : Jun 07, 2018, 09:50 AM ISTUpdated : Sep 19, 2018, 02:29 AM IST
கோடிகளில் புரளும் கோலி!! டாப் 100ல் ஒரே இந்திய வீரர் விராட் தான்

சுருக்கம்

virat kohli takes place in highly paid sportsmen list of forbes

அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட அதிக வருமானம் ஈட்டும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி இடம்பிடித்துள்ளார்.

சமகால கிரிக்கெட்டின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரரும் இந்திய அணியின் கேப்டனுமான விராட் கோலி, பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக திகழ்கிறார். சச்சினின் பெரும்பாலான சாதனைகளை நெருங்கிவிட்டார் கோலி. இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய சக்தியாக கோலி விளங்குகிறார்.

அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிகை, சர்வதேச அளவில் அதிக வருமானம் ஈட்டும் விளையாட்டு வீரர்கள் குறித்த ஆய்வை நடத்தி, வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 100 வீரர்கள் கொண்ட பட்டியலை அந்த பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதில் இடம்பெற்றிருக்கும் ஒரே இந்திய வீரர் விராட் கோலி தான். ஓராண்டிற்கு விராட் கோலி, ரூ. 160.95 கோடி ரூபாய் வருமானம் ஈட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த பட்டியலில் கோலி 83வது இடத்தை பிடித்துள்ளார்.

பூமா, பெப்சி, ஆடி, ஆக்லே உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் விளம்பரத் தூதராகவும், மேலும் பல்வேறு விளம்பரங்களிலும் நடித்து விராட் கோலி வருமானம் ஈட்டி வருகிறார். 

இந்த பட்டியலில் அமெரிக்க குத்துச்சண்டை வீரரான பிளாய்டு மேவெதர் முதலிடத்தை பிடித்துள்ளார். கடந்த ஓராண்டில் மட்டும் இவர், ரூ.1900 கோடி சம்பாதித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் பிரபல கால்பந்து வீரர்களான ரொனால்டோ, மெஸ்சி உள்ளிட்டோரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ஹர்திக் மரண அடி.. பும்ரா மேஜிக் பவுலிங்.. SA-வை கதறவிட்ட இந்தியா.. T20 தொடரை வென்று அசத்தல்!
அபிஷேக் சர்மா சாதனையை சல்லி சல்லியாக நொறுக்கிய ஹர்திக் பாண்ட்யா..! மின்னல் வேக அரை சதம்!