பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடியதற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கிரிக்கெட் வீரர். ஏன்?

First Published Jun 6, 2018, 2:19 PM IST
Highlights
The cricketer apologized to fans for celebrating the birthday cake. Why?


பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடியதற்காக ரசிகர்களிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். 

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த 1-ஆம் தேதி தொடங்கி 3-ஆம் தேதி வரை ஹெடிங்லி நகரில் நடைபெற்றது. 

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் மற்றும் ரமீஸ் ராசா  ஆகியயோர் வர்ணனையாளர்களாகப் பணியாற்றினார்கள்.

இந்தப் போட்டியின் இறுதிநாளான ஞாயிறு அன்று  முன்னாள் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரமின் 52-வது பிறந்த நாள். எனவே, இதனைக் கொண்டாடும் பொருட்டு வக்கார் யூனிஸ் வர்ணனையாளர்கள் பகுதியில் கேக் வெட்டி கொண்டாடினார்.

ஆனால், தற்பொழுது இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதத்தில், இஸ்லாமியர்கள் நோன்பு கடைபிடித்து வருகின்றார்கள் இந்த சமயத்தில் வக்கார் யூனிஸ் பொது இடத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இந்த நிகழ்வு பாகிஸ்தான் ரசிகர்களிடையே அதிருப்தியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் பிறந்தநாள் கேக் வெட்டியதற்காக ரசிகர்களிடம் வக்கார் யூனிஸ் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், "வாசிம் அக்ரமின் பிறந்தநாளையொட்டி கேக் வெட்டி கொண்டாடியதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். புனிதமிக்க ரமலான் மாதத்தையும், நோன்பு கடைபிடிப்பவர்களையும் மதித்திருக்க வேண்டும். இது எங்கள் தரப்பில் தவறான நடவடிக்கை. மன்னியுங்கள்" என்று அவர் கேட்டுக் கொண்டார்.

tags
click me!