விளையாட்டுத் துறை அமைச்சரை சந்தித்து பேசிய முன்னாள் ஒலிம்பிக் வீரர் அபினவ் பிந்த்ரா!

By Rsiva kumar  |  First Published Apr 26, 2023, 11:45 PM IST

ஒலிம்பிக் வரலாற்றில் தனிநபர் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான அபினவ் பிந்த்ரா இன்று தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார்.


கடந்த 2008 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவரும், சிறந்த தொழிலதிபருமான அபினவ் பிந்த்ரா இன்று தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு குறித்து டுவிட்டரில் கூறியிருப்பதாவது: ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் பங்கேற்று தனி நபர் பிரிவில் இந்தியா சார்பில் முதல் தங்கம் வென்றவர் என்ற சாதனையை படைத்த அபினவ் பிந்த்ராவை இன்று சந்தித்தோம். விளையாட்டுத்துறை சார்ந்து முன்னெடுக்க வேண்டிய பல்வேறு அம்சங்களை இந்த சந்திப்பின் போது ஆலோசித்தோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

2ஆவது முறையாக கொல்கத்தாவிடம் சரண்டரான ஆர்சிபி; மும்பையை பின்னுக்கு தள்ளி முன்னேறிய கேகேஆர்!

Tap to resize

Latest Videos

இதற்கு முன்னதாக, ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து அபினவ் பிந்த்ரா கருத்து தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: விளையாட்டு வீரர்களான நாங்கள், சர்வதேச அரங்கில் நமது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த ஒவ்வொரு நாளும் கடுமையாகப் பயிற்சி செய்கிறோம். இந்திய மல்யுத்த நிர்வாகத்தின் மீதான துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நமது விளையாட்டு வீரர்கள் தெருக்களில் போராட்டம் நடத்துவது அவசியமாக இருப்பதைக் கண்டு மிகவும் கவலையாக உள்ளது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எனது இதயம் நெகிழ்கிறது. 

ஜந்தர் மந்தர் போராட்டம்: மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் அபினவ் பிந்த்ரா!

விளையாட்டு வீரர்களின் கவலைகள் கேட்கப்பட்டு நியாயமாகவும் சுதந்திரமாகவும் இந்த பிரச்சினை சரியாக கையாளப்படுவதை உறுதி செய்ய வேண்டும். துன்புறுத்தலைத் தடுக்கவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை உறுதிப்படுத்தவும் கூடிய முறையான பாதுகாப்புப் பொறிமுறையின் முக்கியத் தேவையை இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டுகிறது. அனைத்து விளையாட்டு வீரர்களும் செழிக்க பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதற்கு நாம் உழைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2008 ஒலிம்பிக் போட்டிகளில், 10மீ துப்பாக்கி சுடுவதில் தங்கப் பதக்கம் வென்றார். ஒலிம்பிக் வரலாற்றில் தனிநபர் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் தான் இந்த அபினவ் பிந்த்ரா என்பது குறிப்பிடத்தக்கது.

சரவெடியாக வெடித்த ஜேசன் ராய், நிதிஷ் ராணா, நல்ல பினிஷிங் கொடுத்த ரிங்கு சிங்; கொல்கத்தா 200 ரன்கள் குவிப்பு!

 

ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் பங்கேற்று தனி நபர் பிரிவில் இந்தியா சார்பில் முதல் தங்கம் வென்றவர் என்ற சாதனையை படைத்த திரு. அவர்களை இன்று சந்தித்தோம். விளையாட்டுத்துறை சார்ந்து முன்னெடுக்க வேண்டிய பல்வேறு அம்சங்களை இந்த சந்திப்பின் போது ஆலோசித்தோம். pic.twitter.com/CSzmy2iLIL

— Udhay (@Udhaystalin)
click me!